search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

    • சிவகங்கை அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிரணி கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் கோமதி மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய, வாக்குறுதிகளை நிறை வேற்றாத தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன், பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், கலைப்பிரிவு செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சங்கர் ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் உச்சிப்புளியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழக முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வழிகாட்டுதலின் பேரில் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நொச்சி ஊரணி முனியசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்லாம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவா வரவேற் றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சீனிமாரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளு மன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று ஆதரிக்கும் அணியின் வேட்பாளர் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    • பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல்

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூத் கமிட்டி பணிகள்

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சட்ட மன்றத் தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட அனைத்து பூத் பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றும் பூத் நிர்வாகி களை அந்தந்த பூத்களில் அமைத்தும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை பூத் பணிகளில் பணி யாற்றிடவும், வெகு விரைவில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்து தலைமைக்கு விரைவில் வழங்கிட பணியாற்றிட வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் 3 தொகு திக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பா ளர்கள் நேரடியாக சென்று வாக்காளர் சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூராட்சி பகுதியில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மருங்கூர் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டங்களில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சிவசெல்வராஜன், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு என்ற ஜெயசந்திரன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தாணு பிள்ளை, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நரசிங்கமூர்த்தி, மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, கழக நிர்வாகிகள், ஊராட்சி சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி, இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி நிர்வாகிகள் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன் கலந்து கொண் டார். கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினருக்கு செந்தில் நாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகரா ஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உமாதேவன், இணை செய லாளர் நாகராஜன், அம்மா பேரவை மாவட்ட செய லாளர் இளங்கோவன், மாவட்ட ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். அணி துணைச் செயலாளர் துளாவூர் பார்த்திபன்,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், செந்தில்குமார், திருவாசகம், சேவியர்தாஸ், ஜெகன், கோபி, வடிவேலு, ராஜா, புயல் செந்தில், மாவட்ட அமைப்பு சார அணி செயலாளர் சரவணன்,

    மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் அந் தோணி, மாவட்ட சிறு பான்மை பிரிவு இணைச் செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண் டனர். அதோடு நூற்றுக் கணக்கான கிளை நிர்வாகி களும் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் நகர செய லாளர் இப்ராம்சா நன்றி கூறினார்.

    • விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையாளர் சுந்தரவல்லி தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4,5,18,19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியான எவரும் விடுபட்டு விடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
    • ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. நல்லம்பள்ளி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒன்றியத்தில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    அலுமினிய பாக்கெட்கள், அனுமதிக்கப்பட்ட உணவு கொள்கலன்கள், நுகர்வோர் பாத்திரங்கள்ஆகியவற்றில் மட்டுமே உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.   தடை செய்யப்பட்ட நெகிழிப்பை களில் உணவு பொருட்களை வழங்கக்கூடாது.

    பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.

    இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் வெளிப்புற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் புகையிலை பொருட்களை தடை செய்யப்பட வேண்டும்.

    மேலும் கடத்தூர் பகுதிகளில்புகையிலை பொருட்கள் குறித்து அதிகளவு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும்,  Tn Food Safety Consumer App செயலிக்கும்  மற்றும் foodsafety.tn.gov.in இணைய தளத்திலும் தெரி விக்கலாம்.

     இக்கூட்டத்தில் உணவு பாதுகா ப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, துணை இயக்குநர், ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள்) பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்,குமணன், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சி.கந்தசாமி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகரவர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.
    • வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் வாக்குசாவடி முகவர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவ லர்கள் பலர் பங்கேற்றனர்.

    • மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா பங்கேற்றார்.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தக்குமார்,சார்பு அணியின் மாவட்ட கழக செயலாளர்கள் ரஜினி(எ) சிவக்குமார், குருமூர்த்தி, சாந்தா, குன்னூர் நகர செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட துணை செயலாளர் உஷா, அம்மா பேரவை மாவட்ட துணைசெயலாளர் கோபால்,ஒன்றிய செயலாளர் சக்கத்தா சுரேஷ், பேரூராட்சி செயலாளர் போளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது
    • இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல்வாய்மொழி தனியார் மண்டபத்தில் பூத் நிர்வாகிகள் இளம்பெண் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மேலிடப்பார்வையாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் நலம்காக்க பாடுபட்ட இயக்கம் அ.தி.மு.க.. ஆனால் தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற தி.மு.க. அரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அட்சய கண்ணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி கிருஷ்ணதாஸ், ஆரல்வாய்மொழி நகர செயலாளர் சுடலையாண்டி, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோகினி அய்யப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நவமணி, மோகன் வள்ளி யம்மாள் கிளை கழக நிர்வாகிகள் துணை செல்வன், கச்சேரி நாக ராஜன், சிவசங்கரன், இணை செயலாளர் பேச்சி யம்மாள், அமுதா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×