search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    • ஆயுள் தண்டனை பெற்ற போக்சோ கைதி திடீரென இறந்தார்.
    • கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி யை சேர்ந்தவர் மருதுவீரன் என்ற மதுரை வீரன் (வயது 50). இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மருதுவீரன் அடைக்கப்பட்டி ருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அவ ருக்கு சிறை மருத்துவ மனையில் உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருது வீரனை சிறைத்துறை போலீ சார் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருதுவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிறை அதி காரி முனிஸ்திவாகர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார்.
    • குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவரும், தீவட்டிபட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், கவுசல்யாவை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவுசல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். அதில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.
    • வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆற்று மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு புகார் அளித்து வந்தார். கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீதும் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்துவது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் கடந்த 27.10.2022 அன்று ஒரு வழக்கும், 13.4.2023 அன்று மற்றொரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதனால் லூர்து பிரான்சிஸ் மேல் அவர்களுக்கு விரோதம் ஏற்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் ராமசுப்பிரமணியன் மீது 3 கொலை முயற்சி, சாராயம் காய்ச்சியதாக 5 வழக்குகள், வழிப்பறி உட்பட மொத்தம் 15 வழக்குகளும், மாரிமுத்து மீது மணல் திருட்டு உட்பட 6 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

    இந்த கொலை வழக்கை முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் என்பவர் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரிக்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த மே மாதம் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 2 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 17-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து தூத்துக்குடி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து இருதரப்பினரிடமும் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு தீர்ப்பு கூறினார். அதில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.

    வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் கொலை நடந்த 4½ மாதங்களில் தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குமார், பாபுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அடி நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பாபு உடன்படவில்லை. ஆக்கிரமித்த ஒரு அடி நிலத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தரப்பு பாபுவை அடித்து உதைத்து ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இந்த ெகாலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆயுள்தண்டனை

    இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ரத்தம் படிந்திருந்த சட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு கூறினார். அதில் குமார், பிரேம்குமார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த தீர்ப்பை யொட்டி அவர்களது உறவினர்கள் கோர்ட்டில் கூடியிருந்தனர். குமார், பிரேம்குமார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதும் சோகம் அடைந்தனர். 2 பேரையும் ஜெயிலில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
    • இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த

    புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கமிஷன் பிரச்சினை

    இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

    ஆயுள்தண்டனை

    இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

    • விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
    • இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருந்தவா் முருகன் (வயது 48). இவரிடம் விக்னேஷ் (31), அசோக்குமாா் (28) ஆகியோா் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா். முருகனின் நண்பா் காட்டுராஜா (29). விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அவரை முருகன் பணியை விட்டு நீக்கியுள்ளாா். இதனிடையே, முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபா் 17 ந் தேதி இருந்துள்ளனா்.

    அப்போது அங்கு வந்த விக்னேஷ் முருகனிடம் பணமும், வேலையும் கேட்டுள்ளாா்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகன் உள்பட 3 பேரும் சோ்ந்து விக்னேஷை கீழே தள்ளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா். 

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    • ஆசிரியர் கொலை வழக்கில்

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் பெரம்பலூர் ஸ்ரீபுரந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 5-ந் தேதி செல்வராஜ் இருசக்கரவாகனத்தில் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    உடையார்பாளையம் சோழன்குறிச்சி பிரிவு சாலையில் வந்த போது ஜெயங்கொண்டம் காமராஜ்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர் செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இன்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.

    • இரட்டை கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங் கைது செய்யப்பட்டார்.
    • தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கடந்த 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இரட்டை கொலை வழக்கில் பிரபுநாத் சிங்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.

    • நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

    அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கத்தி கூச்சலிட இனர்ஜூட் முகியா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் இனர்ஜூட் முகியாவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சசிரேகா ஆஜரானார்.

    • மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார்.
    • புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லை பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். 

    • அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரை சேர்ந்தவர் பாப் ஜான். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஜான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளை 3 மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார்.

    டி.எஸ்.பி. லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாப் ஜான் தனது மகளை பலாத்காரம் செய்தது உறுதியானது.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாப்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை அனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த பாப் ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

    • நல்லநாயகபுரம் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
    • அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு டாஸ்மாக் பார் நடத்தி வந்துள்ளார். அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ். இவர்கள் இருவருக்கும் முன்விரோம் இருந்தது.இதன் காரணமாக தமிழ்வேல், அம்பேத்கர், கரிகாலன், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் அந்தோணிராஜ் வீட்டிற்கு சென்று வீட்டிற்குள் படுத்திருந்த அவரது தந்தை தனவேலை வெட்டி கொலை செய்துள்ளனர்.இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் அந்தோணிராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் கைது செய்யபட்டனர்.மேலும் இதுகுறித்த வழக்கு, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், தமிழ்வேல், அம்பேத்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றம் சாட்டபட்ட கரிகாலன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் நிரபராதி என தீர்ப்பு வழங்கபட்டது குறிப்பிடதக்கது.




    ×