search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் கருத்தரங்கம்"

    • ஜி.எஸ்.டி., வரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நீதிமன்றங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் துவக்கி வைத்தார்.இதில் வக்கீல் நடராஜன் பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி என்பது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்துள்ள மிகப்பெரிய புரட்சி. கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு மாறுதல்களுடன் ஜி.எஸ்.டி., வரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வர்த்தகர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஜி.எஸ்.டி., சார்ந்த புரிதல் அதிகரித்துள்ளது.

    வரியை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில், நீதிமன்றங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. ஜி.எஸ்.டி., சார்ந்து ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கோர்ட்டு தீர்ப்புகள், வழிகாட்டுதல்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்கிறது. தேவையான திருத்தங்கள் செய்து வரி சார்ந்த சிக்கல்களுக்கு கவுன்சில் தீர்வுகாண்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.திருப்பூர் பகுதி ஆடிட்டர்கள் பங்கேற்று வரி சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    ×