search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்தை"

    • காகா கூட்டம் ஆந்தையை கொத்தி கொல்ல முயன்றது.
    • உடனடியாக வனத்துறையினரை அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி சிவலுரில் விஜயன் என்பவரது வீட்டுக்கு கூரையில் நேற்று ஒரு அரியவகை ஆந்தை சிக்கி கிடந்தது.

    இதைப் பார்த்த காகா கூட்டம் அதனை கொத்தி கொல்ல முயன்றது. இதைப்பார்த்த விஜயன் காக்கையிடம் இருந்து காப்பாற்றி சாதுர்யமாக ஆந்தையை பிடித்தார்.

    இவரது அண்ணன் ஆசிரியர் ஜெயராஜ் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வீடியோ மூலம் அது வைரலானது. உடனடியாக நாசரேத் அருகில் உள்ள கச்சினா விலை வனத்துறை அலுவலர் கனிமொழி இதை பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினரை அனுப்பி அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது களஞ்சிய ஆந்தை என்றும். பகலில் இதன் செயல்பாடு இல்லாததால் பகலில் காக்கை உட்பட மற்ற பறவைகள் இதனை ஓட ஓட விரட்டும் என்றும் இரவில் இந்த களஞ்சிய ஆந்தைக்கு நன்றாக கண் தெரியும் என்றும். மற்ற பறவைகளை இது இரவில் ஓட ஓட விரட்டும் என்றும் கூறினர். 

    • ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
    • உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. பூட்டி இருந்த மண்டபத்தில் இருந்து ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சென்று பார்த்த போது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு புளியங்கோம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இது அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
    • ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம்.

    தீபாவளி தினத்தன்று ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அவளது வாகனமாகிய உல்லூ-ஆந்தையை சிறப்புடன் போற்றுகிறார்கள். வட இந்தியாவில் ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

    தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை அவர்கள் மிக மிக சுப சகுனமாக கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும் போது ஆந்தை கண்ணில் பட்டால் போகும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என தீர்மானமாக நம்புகிறார்கள்.

    தீபாவளி தினம் என்றில்லை. சாதாரண நாளிலும் இரவில் அது ஒரு வீட்டில் வந்து அமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

    மேலும், வட இந்தியர்கள் அப்படி தம் வீட்டில் வந்து அமரும் ஆந்தை, குரல் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் மிகவும் மனச்சஞ்சலம் அடைவார்கள். தீமை சம்பவிக்கலாமோ என அஞ்சுவர்.

    ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே பதுங்கி வசிக்க தொடங்கி, இரவு பகலாக குரல் எழுப்பினால் விரைவில் லட்சுமி தேவி அந்த வீட்டிற்கு வந்து நிரந்தரமாக தங்கப்போகிறாள் என்று பொருள். அல்லது அந்த வீட்டின் எல்லைக்குள் அமையும் கோவிலில் இப்படி நிகழ்ந்தால் அந்த பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம்.

    நம்மால் பகலில் மட்டுமே எதையும் காண முடியும். மாறாக ஆந்தையால் இரவில் மட்டுமே எதையும் காண முடியும். பெரிய தலை, அகன்ற முகம், கூரிய வளைந்த உறுதியான அலகு, அதை கண்டு எதையும் எளிதில் கொத்தி கிழித்து தின்றுவிட முடியும்.

    பெரிய கண்கள், அதில் ஆழமான கூறிய பார்வை, இரவில் நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கும் லேசான ஒளியும் ஆந்தையின் விழித்திரையில் விழும். ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம். அதன் விழிகள் அசைவதில்லை. கண் சிமிட்டாமல் எதையும் எப்போதும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும்.

    பார்வையை மாற்ற தலையையே இரு பக்கமும் திருப்பும். பார்க்க கம்பீரமாக இருக்கும். உலகெங்கும் ஆந்தையில் ஏறத்தாழ 200 வகைகள். இந்தியாவில் மட்டும் 29 வகைகள். சில இடங்களில் ஆந்தைகள் சுபமானதாகவும், பல இடங்களில் அபசகுணமானதாகவும் மதிக்கப்படுகின்றன. மேல்நாட்டினர் இவற்றை மிகுந்த அறிவுள்ள பறவைகள் என்கின்றனர்.

    யார் ஆந்தையை எப்படி கருதினாலும் சரி, அதுவொரு நன்மை செய்யும் பறவை. தீபாவளியன்று லட்சுமி தேவி பூஜிக்கப்படுவதால், அந்த அன்னையின் வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.

    • வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • மருத்துவர் பகலவன் சிகிச்சை அளித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியில் ஆந்தை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து தன்னார்வ அமைப்பு மூலம் வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் அடிபட்ட ஆந்தையை திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் காங்கய பூபதி தலைமையில் மீட்டு, வெள்ளகோவில் கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று, மருத்துவர் பகலவன் சிகிச்சை அளித்தார்.

    அது நலம் பெற்றதை தொடர்ந்து காங்கயம் வன காவலர் ராஜேஸ்வரி மூலமாக வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணை பகுதியில் விடப்பட்டது.

    • காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்து கிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம் புகுந்தது.
    • ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வனப்பகுதிக்கு இலங்கை, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வசிக்கும் பார்ன் இன ஆந்தைகள் இனப்பெருக்கத்திற்காக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை வரும். இந்த ஆந்தைகளின் விரல் கடினமானதாகவும், விரைப்புடனும் இருக்கும். இந்த வகை ஆந்தை போடி பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்துகிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம்புகுந்தது.

    இந்த ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆந்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    • வானிலை சார்ந்து மேற்கொள்ளப்படும் விவசாயத் தொழில் என்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
    • சுற்றுச்சூழல் சமன்பாட்டில் அனைத்து உயிரினங்களுக்கும் பங்குண்டு.

    திருப்பூர் :

    காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. குறிப்பாக, வானிலை சார்ந்து மேற்கொள்ளப்படும் விவசாயத் தொழில் என்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

    தொழில்நுட்ப புரட்சியில் எவ்வளவு உபகரணங்கள் வந்தாலும் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் சில பூச்சிகள் மற்றும் விலங்கினங்களின் பங்களிப்பு என்பது, எதனுடனும் ஒப்பிட முடியாததாகவே உள்ளது.அந்த வரிசையில் ஆந்தையும் இடம் பெற்றிருக்கிறது. ஆனாலும் பலரும் ஆந்தை என்றால் தீய சக்தியாக கருதும் நிலை, பேதைமைதான். உலக ஆந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவிநாசி அருகே சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், ஆந்தைகள் குறித்து பேசுகையில், சுற்றுச்சூழல் சமன்பாட்டில் அனைத்து உயிரினங்களுக்கும் பங்குண்டு. இதில் ஆந்தைகளின் பணி என்பது விவசாய நிலங்களில் காணப்படும் எலிகள், சிறு முயல்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பூச்சிகளை உணவாக்கி, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆந்தைகள் இல்லாமல் போனால், விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆந்தை ஆண்டுக்கு 700 முதல் 800 எலிகளை உணவாக்கும் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. எனவே, ஆந்தைகளும், விவசாயிகளின் நண்பன்தான் என்றார். 

    ×