search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர அரசு பள்ளி"

    • தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.
    • தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

    நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

    அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.

    தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
    • ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரபாகர் ரெட்டி. இவர் ஆந்திர மாநில விளையாட்டு துறை இயக்குனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி ரெட்டி. இவர்களுக்கு அலெக்ஸ் சுருதி (13), கிருஷ்ணதரன் (11) என ஒரு மகள், மகன் உள்ளனர்.

    பிரபாகர் ரெட்டி தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று தனது பிள்ளைகளை அங்குள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று அலெக்ஸ் சுருதியை 8-ம் வகுப்பிலும் கிருஷ்ணதரனை 6-ம் வகுப்பிலும் ஆங்கில வழி கல்வியில் சேர்த்தார்.

    ஆந்திராவில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது.

    எனவே தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.

    ×