search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர அமைச்சர்"

    • அமைச்சர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மிரட்டி 150 விஐபி தரிசன டிக்கெட் பெற்று நேற்று தரிசனம் செய்தார்.
    • திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் சார்பில் வழங்கப்படும் பரிந்துரை கடிதங்களுக்கு அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில மீன்வளத்துறை அமைச்சர் அப்பாலா ராஜு தன்னுடைய குடும்பத்தினர் உறவினர்கள் தரிசனம் செய்வதற்காக 150 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மிரட்டி 150 விஐபி தரிசன டிக்கெட் பெற்று நேற்று தரிசனம் செய்தார்.

    இதுகுறித்து அமைச்சர் அப்பாலா ராஜு கூறுகையில்:-

    எனது குடும்பம் மிகப்பெரியது. அவர்களுடன் உறவினர்களும் சாமி தரிசனம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். அதனால் 150 பேரை தரிசனத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் வேளையில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய உறவினர்கள் 150 பேருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்திருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×