search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் அவசர சட்டம்"

    ஐகோர்ட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    புதுடெல்லி:

    ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், வருமான வரி கணக்கு தாக்கல், ‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண் பெறுதல் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம்; வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் சேவை இணைப்பு ஆகியவற்றில் ஆதார் கட்டாயம் இல்லை என்று கூறியது.

    ஆனால் வங்கிக்கணக்கு தொடங்கவும், செல்போன் சேவை இணைப்பு பெறவும் ஆதார் அடையாள அட்டையை தாமாக முன்வந்து காட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இது அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்குகள் தாக்கலாயின. அந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.

    அப்போது வழக்குதாரர்கள், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டை நாட விரும்புவதால் வழக்குகளை திரும்பப்பெற அனுமதிக்குமாறு கோரினர். அதை ஏற்று ‘ரிட்’ வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்குதாரர்கள் ஐகோர்ட்டை நாடுமாறு உத்தரவிட்டனர். #Aadhaar #SupremeCourt

    ×