search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்கள் பள்ளி"

    • ராமநாதபுரத்தில் 100 ஆண்டுகள் ஆகியும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
    • எலைட் பள்ளியில் சேருவதற்கு அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும், என்ற நிபந்தனை உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் 1910-ல் உதயமானது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் நிர்வாக காரணங்களுக்காக 1984-ல் விருதுநகர், சிவங்கை, ராமநாதபுரம் என தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

    ராமநாதபுரத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகள் முதல் கடந்த 10 ஆண்டுகளுக்குள் தொடங்கிய தனியார் மேல்நிலைப்பள்ளிகள், என 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அரசு சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் உள்ளது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியோ அல்லது இரு பாலர் மேல்நிலைப்பள்ளியோ 100 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இல்லை. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் 'எலைட்' சிறப்பு பள்ளியில் சேர இயலாத நிலை உள்ளது. முன்னாள் கலெக்டர் நந்தகுமார் தொடங்கிய 'எலைட்' பள்ளியில், சிறப்பு ஆசிரியர்களால் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

    எலைட் பள்ளியில் சேருவதற்கு அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும், என்ற நிபந்தனை உள்ளது. இதனால், ராமநாதபுரம் நகரை சேர்ந்த மாணவர்கள் 'எலைட்' பள்ளியில் சேர முடியாமல் உள்ளனர்.

    இது குறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி, அரசு அதிகாரிகளின் 'பனிஷ்மெண்ட் ஏரியா' என்ற பெயர் மாறி தற்போது கல்வியில் முன்னேறி உள்ளது.

    நன்றாக படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் நலன் கருதி 'எலைட்' பள்ளியில் சேருவதற்கு ராமநாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என்றனர்.

    ×