search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி அமாவாசை திருவிழா"

    • திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் உள்ளது.
    • ஏராளமான கிராம பொதுமக்கள் சேவல், கிடா வெட்டி, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோவில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் உள்ளது.

    இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காலம் என்பதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது.

    அக்கரைப்பட்டி, ஆத்தூர், மல்லையாபுரம், செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் சேவல், கிடா வெட்டி, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால், சடையாண்டி கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள சடையாண்டி சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை நேரத்திலே அலகு குத்தி, பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து பக்தர்கள் ஆடிப்பாடி, மேளதாள வாணவேடிக்கையுடன், கூட்டமாக சென்று வழிபட்டனர்.

    முன்னதாக மலை அடிவாரத்தில் உள்ள சடையாண்டி சாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக, குடிதண்ணீர், விளக்கு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டியிருந்தது. செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×