search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தகுதித் தேர்வு"

    • காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டுமென்றும், வயது உச்சவரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும்.

    அண்மையில், "கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை" என்று கூறியவர் முதலமைச்சர். இன்று இந்த முறையை ஆசிரியர்கள் விஷயத்தில் முதலமைச்சரே கடைபிடிப்பது வேதனை அளிக்கிறது.

    தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சருக்கு உண்டு. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
    • இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    சேலம்:

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் இந்திய அரசாங்கம் சார்பில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலை ஆசிரியர் பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் எழுதினர்.

    இதன் முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

    அதில் இருந்து தேர்வர்கள் தங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தேர்வில் 14.22 லட்சம் பேர் முதல் தாளில் பங்கேற்றனர். அவர்களில் 5.80 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 செப்டம்பர் 10-ல் தொடங்கவிருந்தது.
    • நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

    இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    • தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்
    • மொத்தம் 5861 ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் என்றும் இரண்டாவதாக அரசுப் பணிக்கு மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை 149 வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த அரசாணை வெளியானது.

    இந்த அரசாணை காரணமாக யாரும் எளிதில் வேலைக்கு செல்ல முடியாது என்றும், எனவே இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், இந்த அரசாணை 149 ரத்து செய்யப்படும் என கூறியிருந்தது. அதன்படி அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும்நிலையில், அரசாணை ரத்து இல்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

    நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், காலி பணியிங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கடந்த 5ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. தற்போது தகுதித் தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு கட்டாயம் என்று 2018ம் ஆண்டு அரசாணை வெளியிட்டாலும்கூட அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5861 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருக்கிறது.

    அரசாணை 149 ரத்து தொடர்பாக அரசுத் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவிலை என்பதால் ஏற்கனவே அறவித்தபடி போட்டித்தேர்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ×