search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய சாம்பியன்ஸ் டிராபி"

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சாம்பியன்ஸ் டிராபியை இரு அணிகளும் கூட்டாக பகிர்ந்து கொண்டனர். #AsianHockeyChampionship2018 #India #Pakistan
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருந்தன. இந்திய அணி அரைஇறுதியில் ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கிலும், பாகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் மலேசியாவையும் தோற்கடித்தன.

    இறுதிப் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழையால் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கூட்டாக கைப்பற்றின. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    இதனால் இறுதிப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் இறுதிப்போட்டி மழையால் நடைபெறவில்லை.



    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இரு அணிகளும் 3 முறை கைப்பற்றி உள்ளன. ஏற்கனவே இந்திய அணி 2011, 2016-ம் ஆண்டுகளிலும், பாகிஸ்தான் 2012, 2013-ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது. #AsianHockeyChampionship2018 #India #Pakistan
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பானை 3-2 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்தியா. பைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி ஒன்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் ஜப்பான் பதில் கோல் போட்டது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

    44-வது நிமிடத்தில் சின்லென்சானா கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது. 55-வது நிமிடத்தில் இந்தியாவின் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. 56-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 3-2 என ஆனது.

    கடைசி நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



    அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
    ×