search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கில வழி கல்வி"

    • அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • பனைக்குளத்தில் பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    பனைக்குளம்

    பனைக்குளத்தில் பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி நூற்றாண்டை கடந்து செயல்பட்டு வருகிறது. பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை, தாமரை வூரணி, பொன்குளம், சோகையன்தோப்பு, கிருஷ்ணாபுரம், புதுக்குடி யிருப்பு, ஏந்தல், அய்யன் கோவில், குயவன்குடி, வாலந்தரவை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் படித்த மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேர முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், மக்களும், ஜமாத் நிர்வாகிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழிக்கல்வியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் கே.நவாஸ் கனி எம்.பி.யிடம் பேசினர். இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவதாக கூறினார்.

    இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-

    பனைக்குளம் அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி 11-ம் வகுப்புக் குரிய அட்மிஷனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது என்றார். பனைக்குளம் ஜமாத்தார்கள் கூறும்போது, எங்களது கோரிக்கைகளை உடனடியாக ஏற்று மாண வர்களின் நலன் கருதி நடவடிக்கை மேற்கொண்ட நவாஸ்கனி எம்.பி.க்கும், ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×