search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கில மருத்துவம்"

    • 10-ம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இவர் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பொது மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் மருத்துவ படிப்பு படிக்காமல் அந்த முதியவர் ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்த மருத்துவ மனைக்கு திடீரென சென்று விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகியவை கிடைத்தது.

    இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த முதியவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். ஆனால் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உரிய படிப்பு படித்துள்ளாரா? என்பது குறித்து விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×