search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாய நடை மேம்பாலம்"

    • இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் குறையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.
    • மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள் அழகுபடுத்துதல், புதிய மேம்பாலங்கள் அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதேபோல, சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

    தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் தாமதம் ஆகியது. பின்னர், மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

    மேற்கூரைகள் அமைத்தல், கைப்பிடிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளாக நடைமேம்பாலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும், படிக்கட்டுகளில் வர்ணங்களும் பூசப்பட்டு வருகிறது. இதேபோல, ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அடுத்த வாரம் இந்த ஆகாய நடை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். இந்த ஆகாய நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

    ×