search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதார விழா"

    • இடைக்காடர் சித்தர் அவதார விழா நடந்தது.
    • புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் கோவில் உள்ளது. இங்கு இடைக்காடர் அவதார விழா நடந்தது. திருவிளக்கு பூஜையை தொடர்ந்து வீதி உலா நடந்தது. பின்னர் ஹோமங்கள், யாகங்கள், பஞ்சபூத வழிபாடு நடத்தப் பட்டது. தொடர்ந்து கோ பூஜை, பரிபூஜை, கிடாய் பூஜை செய்து இடைக்காடர் சித்தருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    இடைக்காடர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சி யளித்தார். நவக்கிரக சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் மதுரை, சிவ கங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை இடைக்காடர் சித்தர் புண்ணிய ஞான ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா நடைபெற்றது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165-வது அவதார விழா கருப்பனேந்தல் மடத்தில் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.

    பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும், அபிஷேகப் பொருட்களாலும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அவதார விழாவில் பங்கேற்று மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனர். கருப்பனேந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.

    ×