search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவகாசம் நீட்டிப்பு"

    • குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 2024-ம் ஆண்டுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறியதாவது:-

    பிறப்பு பதிவு குழந்தை யின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது.

    பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றி தழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.

    ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த குழந்தை யின் பிறப்பு பதிவு செய்யப் பட்ட 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாள ரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

    12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

    இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறி வுரைபடி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப் பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கட்டுள்ளது.

    பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய பிறப்பு, இறப்பு பதிவா ளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33ஆயிரத்து330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5ஆயிரத்து661 விவசாயி களுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமா கத்தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதில் சாதனை படைத்துள்ளோம்.பயிர் கடன் ஆரம்ப காலத்தி லேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும்.

    இதன் மூலம் இடைத்தர கர்களின்றி விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 5-ல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கி உள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் வகையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25 சதவீதம் உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை 1 வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி, கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (ராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    தகுதியான சிறு பான்மையின மாணவ- மாணவிகள், பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30-ந்தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அட்மிசன் நடந்து வருகிறது.
    • மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கடந்த 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி டிப்ளமோ படிப்புகளுக்கு 15.07.2022 வரையும், பி.டெக், பி.எட் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு 05.07.2022 வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காந்திகிராம பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முழு விவரங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் உள்ளன.

    • மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையால் கீயூட் என்னும் பொது நுழைவு தேர்வை நடத்துகிறது.
    • கீயூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

    சின்னாளப்பட்டி:

    காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்புக்கான கீயூட் நுழைவு தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையால் கீயூட் என்னும் பொது நுழைவு தேர்வை நடத்துகிறது. திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் 17 இளங்கலை படிப்புகளில் சேரவும் இந்த கீயூட் நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

    இந்த நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி கடந்த மாதம் 22 ம் தேதி முடிவடைந்த நிலையில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருந்ததால் அவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இளநிலை படிப்புகளுக்கான கீயூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த இரண்டு நாளில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் திருத்தமும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காந்திகிராம பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மேலும் கீயூட் நுழைவு தேர்வு ஜூலை மாதம் 15, 16, 19, 20. ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6, 7, 8, மற்றும் 10 ஆகிய தேதிகளில் கணினிவழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×