search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்ட்ராவைலட்"

    • ஸ்பேஸ் எடிஷன் மாடல் சந்திரயான் 3 விண்கலத்துக்கு மரியாதை செலுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஸ்பேஸ் எடிஷன் மாடல் மொத்தத்தில் பத்து யூனிட்களே உருவாக்கப்படுகின்றன.

    அல்ட்ராவைலட் நிறுவனம் தனது F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பேஸ் எடிஷன் விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22) மாலை 6 மணிக்கு அல்ட்ராவைலட் வலைதளத்தில் துவங்குகிறது. ஸ்பேஸ் எடிஷன் மாடல் மொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் ஸ்பேஸ் எடிஷன் மாடல் ஏரோஸ்பேஸ் தர பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் 7075-கிரேடு அலுமினியம், விசேஷமான யு.வி. ரெசிஸ்டன்ட் பெயின்ட் மற்றும் அலுமினியம் சாவி வழங்கப்படுகிறது. அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலின் பேட்டரியில் ஃபெயில்-ப்ரூஃப் சிஸ்டம்கள், 9 ஆக்சிஸ் ஐ.எம்.யு. வழங்கப்படுகிறது.

    இவைதவிர இந்த மாடலிலும் 40.5 ஹெச்.பி. பவர் மற்றும் 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய அல்ட்ராவைலட் F77 மாடல் முழு சார்ஜ் செய்தால் 307 கிமீ வரை செல்லும்.

    பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் அல்ட்ராவைலட், இந்திய சந்தையில் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அல்ட்ராவைலட் F77 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அல்ட்ராவைலட் F77 மாடல் ஸ்டாண்டர்டு, ரெக்கான் மற்றும் ஸ்பெஷல் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான டிசைன், எல்இடி ஹெட்லைட், பெரிய ஃபேரிங், ஸ்ப்லிட் சீட் செட்டப், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 ஸ்டாண்டர்டு மற்றும் ரெக்கான் வேரியண்ட்கள் சூப்பர்சோனிக் சில்வர், ஸ்டெல்த் கிரே மற்றும் பிளாஸ்மா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் வேரியண்ட் மீடியோர் கிரே + ஆஃப்டர்பர்னர் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

    இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் 27 கிலோவாட் மோட்டார், 7.1 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 206 கிலோமீட்டர் வரை செல்லும். ரெக்கான் மற்றும் ஸ்பெஷல் வேரியண்ட்களில் முறையே 29 கிலோவாட் மற்றும் 30.2 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களுடன் 10.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. அல்ட்ராவைலட் F77 ரெக்கான் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஸ்பெஷல் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 157 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு வேரியண்ட்களும் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்களின் மோட்டார்களும் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் 41 மில்லிமீட்டர் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலட் F77 மாடலில் 5 இன்ச் அளவில் TFT ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அடாப்டிவ் டேஷ் லைட்னிங், ஆட்டோ ஹெட்லைட் ஆன்/ஆஃப், நேவிகேஷன், வெஹிகில் லொகேட்டர், ஃபால் மற்றும் கிராஷ் சென்சார் உள்ளது.

    முதற்கட்டமாக அல்ட்ராவைலட் F77 வினியோகம் பெங்களூருவில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து மும்பை, கொச்சின், சென்னை, ஐதராபாத் என பல்வேறு நகரங்களில் படிப்படியாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் பேஸ் மாடலுக்கு 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி, ரெக்கான் மாடலுக்கு 50 ஆயிரம் கிலோமீட்டர்களும், ஸ்பெஷல் வேரியண்டிற்கு 1 லட்சம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு விவரம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவைலட், தனது F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், அல்ட்ராவைலட் F77 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அல்ட்ராவைலட் F77 மாடல் இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    மேலும் புதிய அல்ட்ராவைல்ட F77 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராவைலட் F77 பல்வேறு காரணங்களுக்காக விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

    முந்தைய திட்டப்படி அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இரண்டாம் தலைமுறை மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், இதன் முதல் தலைமுறை மாடலே அடுத்த மாதம் தான் விற்பனைக்கு வர இருக்கிறது. 2019 அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட தற்போது விற்பனைக்கு வரும் மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    ×