search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலக ஊழியர்கள்"

    • திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் லிங்கராஜன் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • விஷம் குடித்து இருப்பது தெரிய வந்ததும், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் லிங்கராஜன் (வயது 34). இவர், முன்சிறை பகுதியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா.

    இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் லிங்கராஜன் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் லிங்கராஜன் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவர் விஷம் குடித்து இருப்பது தெரிய வந்ததும், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே லிங்கராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    காரைக்கால்:

    ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், புதுச்சேரி முதலமைச்சருக்கு நேற்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினார்.

    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் சங்க தலைவர் பழனிவேல் தலைமையில் ஏராளமானவர்கள் காரைக்கால் தலைமை தபால் நிலையத்திலிருந்து, புதுச்சேரி முதலமைச்சருக்கு போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பினர். இதில், காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

    ×