search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுமினிய கம்பிகள்"

    • மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவர் திருடிய 12 கிலோ அலுமினிய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டி மெயின் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலக வளாத்திற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி சென்று அலுமினிய கம்பி திருடி செல்வது தெரியவந்தது. இதுபற்றி மின்வாரிய உதவி பொறியாளர் தனமூர்த்தி இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீசில் புகார் செய்தார். இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், சுப்பிரமணியபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் அலுமினிய கம்பிகளை ஒரு பெண் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் இருக்கும் பெண்ணை விசாரணை நடத்திய போது அவனியாபுரம் ஜீவா நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த அயில் என்பவர் மனைவி பஞ்சவர்ணம் (வயது 57) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருடிய 12 கிலோ அலுமினிய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய அலுவலகத்தில் திருடிய பஞ்சவர்ணத்தை கைது செய்தனர்.

    ×