search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவம்பர் 14ம் தேதி"

    • அரியலூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது.
    • 17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாது:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் 14ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது.

    அரியலூர் மாவட்டத்தில் 14 ம் தேதி பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டகோவில், அமினாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி, ஆகிய கிராமங்களுக்கும்,

    15ம் தேதி நாகமங்கலம், ரெட்டிபாளையம், புதுப்பாளையம், சிறுவலூர், கருப்பூர், சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருகோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாகாடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும்,

    16ம் தேதி கீழப்பழுவூர் உள்வட்டம் மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, பழங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டங்குறிச்சி, ஆகிய கிராமங்களுக்கும்,

    17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்

    21ம் தேதி ஏலாக்குறிச்சி உள்வட்டத்தில் விழுப்பனங்குறிச்சி, கீழ கொளத்தூர், சின்னபட்டா காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளன், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது. ஜமாபந்தி காலங்களில் மனுக்களை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூடுகிறது என அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLanka #Parliment #Maithripalasirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபராக பதவி வகிக்கும் மைத்ரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.

    மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.

    அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்தம.



    இதற்கிடையே, இலங்கை பாராளுமன்றம் 7-ம் தேதி கூடும் என தகவல் வெளியானது. ஆனாலும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பாராளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்தது.

    இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதிபரின் இந்த உத்தரவால் இலங்கை பாராளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #SriLanka #Parliment #Maithripalasirisena
    மணப்பாறை அருகே நள்ளிரவில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ்கள் மோதலில் 14 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்தின் முன் பகுதி சேதமடைந்ததுடன் பயணிகள் சிலரும் காயமடைந்தனர். இந்தநிலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி , சமீபத்தில் புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சும் எதிர்பாராத விதமாக ஏற்கனவே லாரி மீது மோதிய அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகளான ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 50), திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் (54), எட்வர்ட் (18), பாலமுருகன், சபரிநாதன், கண்டெய்னர் லாரி டிரைவர் ஜெயராஜ் (38), பழனியை சேர்ந்த காமாட்சி சுந்தரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்திக் (55) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    மேலும் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேகர், வடமதுரையை சேர்ந்த மகேஷ்வரன், தொட்டியத்தை சேர்ந்த பிரசாத், திண்டுக்கல்லை சேர்ந்த அமிர்தம், திருவாரூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் லேசான காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து விட்டு காயமடைந்தவர்களை மீட்டு அனுப்பி வைப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்த தெற்கு சேர்ப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரும் விபத்தில் சிக்கினார். அவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி, சப் -இன்ஸ்பெக்டர் ரூபினி, நெடுஞ்சாலை ரோந்து வாகன சப் -இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×