search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுத்துறைகள் முடக்கம்"

    அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே புதிய உடன்பாடு ஏற்பட்டது. #USMexico #BorderWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் முடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.

    பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் வருகிற 15-ந் தேதி காலாவதியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே நேற்று நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.

    அதே சமயம் இந்த உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
    அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம்.

    பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்துவார். பட்ஜெட் செய்தி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஜனாதிபதியின் உரையில் இடம் பெறும்.

    அந்த வகையில், வருகிற 29-ந் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி ஜனாதிபதி டிரம்புக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அடுத்த நாளே தனது அழைப்பை திரும்பப்பெற்றார்.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

    அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான்சி பெலோசி என்னை அழைத்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். ஆனால் பின்னர் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். நாடாளுமன்ற உரைக்கு தாமதமான ஒரு தேதியை அவர் பரிந்துரைக்கிறார். அரசுத்துறைகள் முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அமெரிக்காவில் அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும் என ஹாலிவுட் பாடகி லேடி காகா வலியுறுத்தி உள்ளார். #LadyGaga #DonaldTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி காகா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் படி வலியுறுத்தி உள்ளார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பிழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார். #LadyGaga #DonaldTrump
    ×