search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் சட்டம்"

    அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்காவிட்டால் ஆபத்து என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். #SupremeCourt #ChiefJustice #RanjanGogoi
    புதுடெல்லி:

    அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:-

    அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும் திகழ்கிறது. சிக்கலான, நிச்சயமற்ற சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்பது நமக்கு நல்லது. இல்லாவிட்டால், நமது கர்வம், நம்மை பெரும்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும்.

    நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. ஆகவே, வெறுமனே கொண்டாடாமல், வருங்காலத்துக்கான பாதையை வடிவமைக்க இந்நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கர்நாடக கவர்னரின் நடவடிக்கை அரசியல் சட்டத்தை மீறுவதாகும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்று மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.

    இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    “ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்ற மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. குமாரசாமியை தான் ஆட்சியை அழைக்க கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். மாறாக பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்தார்.

    கவர்னரின் இத்தகைய நடவடிக்கை அரசியல் சட்டத்தை மீறுவதாகும். இது நாட்டுக்கு நல்லதல்ல. கவர்னர் அரசியமைப்பின் அதிகாரம் பெற்றவர். அவரால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கூறும் போது, மைனாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் கவனர் வஜூபாய் வாலா ஜனநாயக படுகொலை நிகழ்த்தியுள்ளார்.

    பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் வழங்கியதன் மூலம் எதிர்க்கட்சிகளை உடைத்து குதிரை பேரம் நடத்த வழி வகுத்துள்ளார். கவர்னரின் இத்தகைய செயல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார் மேலும் அவர் கூறும் போது ஆர்.எஸ்.எஸ். கவர்னரிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

    பா.ஜனதா கட்சியின் அதிருப்தியாளரும் நடிகருமான சத்ருகன் சின்கா கூறியதாவது:-

    போதுமான மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில் அங்கு ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு செய்தது ஏன்?.

    அரசிலில் பண பலத்தை விட மக்கள் பலமே ஏற்றுக் கொள்ளத்தக்கது. அனைவரால் விரும்பக் கூடியது என்றார்.


    ×