search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்கள் ஏரி ஆய்வு"

    • ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது
    • அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஸ் நிலையத்தில் தற்போது இடவசதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.இதற்கு மாற்றாக அதனை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதனைதொடர்ந்து வாலாஜா நகராட்சி அலுவலக கட்டிடமும் இட நெருக்கடியால் போதிய இடவசதியின்றி இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி அலுவலகத்தில் இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

    வாலாஜா பஸ் நிலையம் தற்போது இருக்கும் இடத்தினை மேம்படுத்திட 1.90கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவும் கூடுதலாக பஸ் நிலையம் கூரை அமைத்திட புதிய திட்ட அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையாளரை கேட்டுக்கொண்டனர். புதிய பஸ் நிலையம் கட்ட நகர எல்லை பகுதியில் இடம் தேர்வு செய்து வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

    உடனடியாக பஸ் நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். வாலாஜா நகராட்சி அலுவலக கட்டிடம் அமைக்க நகராட்சி பகுதியில் அரசு இடம் 62 சென்டுள்ளது.

    அந்த இடத்தில் புதிய கட்டிடம் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தற்போது இருக்கும் கட்டிடம் மாற்றி அமைக்கப்பட்டு வணிக வளாகம் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் வருவாய் கிடைக்கும்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    புதிய பஸ் நிலையம் கட்ட வாலாஜா எல்லைப் பகுதியில் இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கையை அனுப்பிவைப்பது தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி ஆகியோர் கலந்தாலோசித்தினர்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சியில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள பிஞ்சி ஏரியிணை இயற்கை எழிலுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சமாக மாற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

    புணரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் காந்தி மற்றும் பிஞ்சி ஏரி புணரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் காந்தி ஆகியோர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோருக்கு எடுத்துரைத்தனர்.தற்போது ஏரி நீர்வளத்துதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.இதனை மாற்றிட துறைக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.பிஞ்சி ஏரி பொழுதுபோக்கு அம்ச இடமாக மாற்றிட ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    இப்பணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் உடனே நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஏரி ஒப்படைத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை பெற்று வழங்கிட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    ×