search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பேட்டி"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கலெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன்,புகழேந்தி ஆகியோர் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு மற்றும் மின் வாரிய குடியிருபபு காலனி, ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் நகராட்சிகள் அனைத்திலும் அடிப்படை கட்டமைப்புகள் உயர் தொழில்நுட்ப வசதிகளோடும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 165.686 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதித்தல், 7018 பழுது நீக்குவதற்கான நுழைவு தொட்டி, 3 பிரதான கழிவு நீரேற்று நிலையம், 7 கழிவுநீர் உந்து நிலையம், 7 கழிவுநீர் உந்து மனித ஆள்நுழைவு தொட்டி, 17 பம்ப் ஹவுஸ், 17.90 கி.மீ நீளத்திற்கு பம்பிங் மெயின், 14,150 வீட்டு இணைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் நகராட்சி க்குள்ளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால்நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர்கே.என்.நேரு விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தபோது அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றுள்ளதால், நகராட்சிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றியமையாததாக உள்ளதால், அனைவரின் ஒத்துழைப்போடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    தொடர்ந்து, விழுப்புரம், அண்ணா மலை பல்கலைக்கழக இடைநிலை விரிவாக்க கல்வி மையத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தமிழ்நாட்டில், வருகிற கல்வியாண்டில் அனைத்து கல்லூரி களிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் ஆர்.டி.ஒ .ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் அன்பழகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூர் பட்டாசு ஆலைவெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், படுகாய மடைந்தவர்களுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  

    எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா?, உரிமம் இன்றி இயங்கி யதா? என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
    • கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

    ஊட்டி,

    தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில், கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

    இதையடுத்து, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் 4 பயனாளிகளுக்கு தனி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையையும், தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 20 பேருக்கு பணி ஆணையையும் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் சுதா்ஷன், உதவிப் பொறியாளா் விவேக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதற்கிடையே அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை பசுமையாக்கல் திட்டம் மற்றும் 33 சதவீதம் வனப்பரப்பை உயர்த்தும் திட்டத்தின் கீழ் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 261 கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது வனத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் சோலை மரக்கன்றுகள் நாற்று உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2022-23-ம் ஆண்டிற்குள் 2.5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் 1.73 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள நாற்றுகள் மற்ற துறைகளை கொண்டு உற்பத்தி செய்து நடவு செய்யப்படும். மேலும் தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா உருவாக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் புதிதாக காட்சி கோபுரம், அலங்கார நடைபாதைகள் அமைக்க ப்படும். லாங்வுட் சோலை பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×