search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா எச்சரிக்கை"

    • பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
    • இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    வாஷிங்டன்:

    ஈரான் அதிபர் இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.

    இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

    இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.

    மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.

    பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும்.
    • ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவு அந்நாட்டு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். நான் தெளிவாகச் சொல்கிறேன், ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்த நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த சல்லிவன், உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல என்றார்.

    இது ரஷிய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவும் புதினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.

    ×