search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமர் ஜவான் ஜோதி"

    குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். #RepublicDay #AmarJawanJyoti
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் போர் வீரர்கள் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து, உயிர்நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு மோடி புறப்பட்டார்.



    அதேசமயம், குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தனர். அவர்களை விழா அரங்கில் பிரதமர் மோடி வரவேற்று அழைத்துச் செல்கிறார்.

    அதன்பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

    இந்திய ராணுவத்தின் பெருமைமிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. #RepublicDay #AmarJawanJyoti
    ×