search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி சர்க்கரை ஆலை"

    • ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
    • வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பணிகள் கடந்த மே 3 தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா். அப்போது, நடைபெற்ற புதிய எந்திரங்கள் பொருத்தும் பணியையும் பாா்வையிட்டாா்.தொடா்ந்து, உடுமலை வட்டம், ராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

    ஆய்வின்போது மேலாண்மை இயக்குநா் சண்முகநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • கரும்பு அரவைக்கு வாகனங்களில் இருந்து இறக்க ரோப் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
    • ஆலை அரவை பணிகள் துவங்க குறுகிய நாட்களே உள்ளதால் எந்திரங்கள் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள பழமையான எந்திரங்களால் ஆலை அரவை பணிகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதித்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ஆலை எந்திரங்கள் புதுப்பிக்கும் பணி, கரும்பு அரவைக்கு வாகனங்களில் இருந்து இறக்க ரோப் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. நடப்பாண்டு கரும்பு அரவை வருகிற 21-ந் தேதி துவக்க உள்ளது. இதற்காக கடந்த 10ந்தேதி ஆலை பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா நடந்தது. ஆலை அரவை பணிகள் துவங்க குறுகிய நாட்களே உள்ளதால் எந்திரங்கள் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    • ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.
    • நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்ப ட்டு வருகிறது.சுமார் 63 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பழமை யான இந்த ஆலை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை,மடத்துக்குளம், பல்லடம்,தாராபுரம்,பழனி,நெய்க்காரப்பட்டி,ஓட்டன்சத்திரம்,குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் இந்த ஆலை யின் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனாலும் கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது,உரிய நேரத்தில் கரும்பு வெட்டாதது வெளி ச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரண ங்களால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைக்காத நிலையே உள்ளது.மேலும் கடந்த அரவைப் பருவத்தில் 86 நாட்கள் ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.இதனால் நடப்பு ஆண்டில் கரும்பு பதிவு செய்வதில் விவ சாயிகளிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை யடுத்து அமராவதி சர்க்கரை ஆலை பழுதில்லா மல் தொடர்ந்து இயங்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இயன்ற வரை சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று ள்ளதால் நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இதனையடுத்து வரும் 21ந் தேதி அரவை துவங்க திட்டமிட்டு இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது.விழாவில் அமராவதி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முக நாதன்,கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முக வேல், செயலாளர் ஈஸ்வரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலதண்ட பாணி,வீரப்பன்,தலைமைப் பொறியாளர் பார்த்திபன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், தலைமை ரசாயன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது அமராவதி சர்க்கரை ஆலையில் மேற்கொள்ள ப்பட்டுள்ள பணி கள்,இன்னும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட வை குறித்து விவ சாயிகள் கேட்டு தெரிந்து கொண்ட னர்.மேலும் ஆலை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்புகளைக்களை வதற்கான நட வடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.மேலும் வரும் 17ந் தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவது எனவும்,21 -ந் தேதி அரவை தொடங்குவது எனவும் திட்டமிடப்பட்டது. 

    • 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.
    • ரூ.10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலை அங்கத்தினர்களாக 3 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.அவர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காதது, வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைப்பதிலும், பழமையான எந்திரங்களால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 94 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு 88 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.

    சர்க்கரை கட்டுமானம் எனப்படும் கரும்பு பிழிதிறன், கடந்த 5 ஆண்டுகளாக 7.8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.

    பழமையான எந்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை ஆலையிலுள்ள எந்திரங்கள் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை கிரேன் வாயிலாக கரும்பு அரவைக்கு எடுக்கப்பட்டு வந்த நிலையில் 2 கோடி ரூபாய் செலவில் நவீன முறையான ரோப் வாயிலாக வாகனங்களிலிருந்து கரும்பு அரவைக்கு எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் அரவை முதல் சர்க்கரை உற்பத்தி வரை உள்ள எந்திரங்கள் ரூ. 10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.ஆலை நவீனப்படுத்தப்பட்டதால் சர்க்கரை ஆலையில் பிழிதிறன் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த இரு ஆண்டாக பெய்த பருவமழைகள் காரணமாக ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கரும்பும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.நடப்பாண்டு இதுவரை 2 ஆயிரம் ஏக்கரில் 80 ஆயிரம் டன் கரும்பும், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 10 ஆயிரம் டன் கரும்பு மற்றும் பதிவு செய்யாத விவசாயிகளிடமிருந்து கொள்முதல் என ஒரு லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு கரும்பு அரவை பணிகளை ஏப்ரல் 21-ந் தேதி துவக்க திட்டமிட்டு ஆலை புனரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலை அரவை துவக்குவதற்கு முதற்கட்டமாக ஆலையிலுள்ள பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா வருகிற 10-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆலைக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.இதில் விவசாயிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் பங்கேற்குமாறு மேலாண் இயக்குனர் சண்முக நாதன் தெரிவித்துள்ளார். 

    • வருவாய்த்துறை - வேளாண்துறை இணைந்து சிறப்பு முகாம் அமைத்து தீர்வு காண வேண்டும்.
    • விவசாயி முன்னுரிமை இழந்து விட்டால் மீண்டும் மின் இணைப்புகிடைக்க 20 ஆண்டுகள் கூட ஆகலாம்.

    உடுமலை :

    உடுமல கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- குடிமங்கலம் பகுதியில் இயங்கி வரும்கா லாவதியான காற்றாலைகளை அப்புறப்படுத்த வேண்டும். உப்பாறு ஓடையில் கேரள க்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் தட்டுப்பாடு நிலவுகிறது. கிசான் சம்மான் நிதி பல விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. வருவாய்த்துறை-வேளாண்துறை இணைந்து சிறப்பு முகாம் அமைத்து தீர்வு காண வேண்டும். அரசு கொப்பரை கொள்முதல் தொடங்க உள்ள நிலையில் உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் சிறு விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

    கோவை மாவட்டத்தில் குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நமது பகுதியிலும் அனுமதி வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் பயிர்களை மட்டுமல்லாமல் வட்டப் பாத்திகளையும் சேதப்படுத்தி விடுகிறது. கால்நடைகளுக்கான தீவனத்தை தின்று விடுகிறது.அவற்றைத் தடுக்க முயற்சித்தால் விவசாயிகளின் மீது வழக்கு போடப்படுகிறது. மருந்து கலந்த விதைகளே விற்பனைக்கு வருகின்றன. பூச்சி மருந்து தெளிக்காமல் எந்த விவசாயமும் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.ஆனால் மருந்து தெளித்த தக்காளிப் பழத்தையோ, மருந்து கலந்த விதையையோ தின்று மயில் உயிரிழந்தால்விவசாயி குற்றவாளி யாக்கப்படுகிறான். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்குகவுர் வாய்க்கால்,கொப்பு வாய்க்காலுக்கு தேவையில்லாத நிலையிலும் பொதுப்பணி த்துறையிடம் தடையில்லா சான்று கேட்டு மின்வாரியத்தினர் அலைக்கழிக்கிறார்கள். இதனால் விவசாயி முன்னுரிமை இழந்து விட்டால் மீண்டும் மின் இணைப்புகிடைக்க20 ஆண்டுகள் கூட ஆகலாம்.எனவேதடையில்லாமல் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். மருள்பட்டி உள்ளிட்டபகுதிகளில் முறையானஆய்வுகள் இல்லாமல்பாசனக்கா ல்வாய்களையொட்டி வீட்டு மனை அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.இதனால் கால்வாய்கள் அழிக்கப்படுகிறது.சில பகுதிகளில் வாய்க்கால்களில் நேரடியாக கழிவறைக்குழாய் இணைக்கப்பட்டு கழிவுகள் கலக்கப்படுகிறது.இதனைத் தடுக்க வேண்டும்.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர், கிரேன்,எடைமேடை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. முறையான பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ள நிலையில் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 20ந்தேதி அரவை தொடங்குமா என்பது கேள்விக்கு றியாகவே உள்ளது. தொடங்கி னாலும் இடைநிற்றல் இல்லாமல் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் உள்ளது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள விவசாயி களை பதிவு செய்ய வைக்கவும், சிறப்பாக ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுக்கம்பா ளையம்-குண்டலப்பட்டி சாலை உட்பட பல கிராம இணைப்புச் சாலைகள் சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்தால் 1000 கிலோவுக்கு மேல் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் ஒரு ஏக்கருக்கு 291 கிலோ மட்டுமே அரசு கொள்முதல் மையங்களில் கொ ள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே முழுமையாக கொள்மு தல் செய்ய வேண்டும். திருமூர்த்தி அணையில் மிகக் குறைந்த அளவில் நீர் இருப்பு உள்ள காலங்களில் கூட முழுமையாக குடிநீர் விநியோகம் செய்யப்ப ட்டது. தற்போது நிர்வாக குளறுபடிகளால்குடிநீர் விநியோகத்தில்சிக்கல் ஏற்படுகிறது. எனவே மக்கள் தொகை அடிப்படையில் முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியம் ஆத்துக்கிணத்துப்பட்டியில் 2009 ம் ஆண்டு நிலசீர்திருத்த சட்டத்தில் எடுக்கப்பட்ட நிலம் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பிலுள்ள 116 ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவ னத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். லாரி லாரியாக நான்கு வழிச்சாலைக்கு மண் எடுக்க அனுமதி கிடைக்கிறது.கேரளாவுக்கு மண் செல்கிறது.ஆனால் விவசாயிக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை.இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்தி ரசீது பெற்றுள்ள விவசாயிகளுக்கு மீண்டும் கடன் மறுக்கப்ப டுகிறது.அவர்களுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை எடு க்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    • நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
    • 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார். 

    • ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால் அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
    • ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க ஆலோசனை கூட்டம்ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.தலைவர் சண்முகவேலு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முத்துச்சாமி மற்றும் பாலதண்டபாணி, வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவைக்குத்தேவையான கரும்பு வெட்டும் போது, பாரபட்சம் சிபாரிசு அடிப்படை என முறைகேடு நடக்காமல் வரிசைப்படி மட்டுமே மேற்கொள்வதோடு, பணியை வேகப்படுத்த வேண்டும். ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால், அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, தமிழக முதல்வருக்கு மனு அளிப்பது.ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது. பிழிதிறனை அதிகரிக்கவும் ஆலையில் சர்க்கரை சாறு செல்லும் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், அதிகளவு சாறு வீணாகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    ஆலையில், கரும்பு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், வெட்டுக்கூலி நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆலோசனை பெற்று, அதிகாரிகள் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×