search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்தெல் பதாக் அல் சிசி"

    • இந்தியாவின் அடுத்த குடியரசு தினவிழா 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுதின விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.

    அந்த வகையில், இந்தியாவின் அடுத்த குடியரசு தினவிழா 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசிக்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

    இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2022 - 23 காலத்தில் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் போது நட்பு நாடாக எகிப்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    ×