search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னசுரபித் திட்டம்"

    • வாழப்பாடியில் அன்னசுரபித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
    • அன்னசுரபித் திட்டத்தின் கீழ், தினந்தோறும் வாழப்பாடி அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 100 பேருக்கு, தொடர்ந்து ஆண்டு முழுவதும் மதியஉணவு வழங்கப்படும்

    வாழப்பாடி:

    வாழப்பாடியில், 32 ஆண்டுகளாக இயங்கி வரும் வாழப்பாடி அரிமா சங்கம், அன்னை அரிமா சங்கம் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளையுடன் இணைந்து, தினந்தோறும் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் அன்னசுரபித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

    இத்திட்ட தொடக்க விழா வாழப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு, வாழப்பாடி அரிமா சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வரவேற்றார். அரிமா மாவட்ட‌ ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் மோதிலால், அரிமா அறக்கட்டளை நிறுவனர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், நோயாளி–களுக்கு உணவு வழங்கி அன்னசுரபித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்னசுரபித் திட்டத்தின் கீழ், தினந்தோறும் வாழப்பாடி அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 100 பேருக்கு, தொடர்ந்து ஆண்டு முழுவதும் மதியஉணவு வழங்கப்படும் என, அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×