search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிதா ராகிருஷ்ணன்"

    உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 2 புதிய ரேசன் கடைகளில் அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு மீனவ கிராமத்தில் தற்காலிகமாக செயல்படும் 2 ரேசன் கடைகளும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை புதுபித்து கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ண எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் ஊர் நுழைவு பகுதியில் ஒரு ரேசன் கடையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ. 10 லட்சத்தில் கடற்கரை சாலையில் ஒரு ரேசன் கடையும் கட்ட நிதி ஒதுக்கினார். இதற்கான பணிகள் தொடங்கி பணி முடியும் தருவாயில் உள்ளது.

    இதை அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மீனவர்கள் இந்த கடைகளை திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழைய ரேசன் கடை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது என தெரிவித்தனர். எம்.எல்.ஏ. செல்போன் மூலம் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 30 நாட்களில் இந்த புதிய கட்டிடத்தில் ரேசன் கடைகள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    அவருடன் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலசிங், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா,

    மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷேக்முகமது, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மைக்கேல், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மெராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜய், திரவியம், குமார், செல்வம், அந்தோணி,தினேஷ், ஸ்டாலின், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×