search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகரிக்கும்"

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விதி மீறும் மினி வேன்களால் அதிகரிக்கும் விபத்துகள் ஏற்படுகிறது
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

    கரூர்:

    கரூர் நகரில் அதிகளவில், சரக்குகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஏற்றி செல்கின்றனர். வாகனத்துக்கு வெளியே பல அடி துாரத்துக்கு இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால், கரூரில் மினி வேன் ஓட்டுநர்கள், இதனை மீறுவதால், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இது குறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு இரட்டை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 11 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 26 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×