search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக சிக்ஸர்கள்"

    ஐபிஎல் தொடரில் இந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் 750க்கும் அதிகமான சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது புதிய சாதனையாக உள்ளது. #VIVOIPL #IPL2018 #MostSixes

    புதுடெல்லி:

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

    நேற்று நடைபெற்ற 52வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரிஷப் பாண்ட் அடித்த சிக்ஸர் ஒன்று நடப்பு சீசனில் 750-வது சிக்ஸராக பதிவானது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் எண்ணிக்கை இதுவாகும். மொத்தமாக இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற 52 போட்டிகளில் 764 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி வீரர்களே அதிக சிக்ஸர் அடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இந்த சீசனில் இதுவரை 123 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். 



    டெல்லி 108, கொல்கத்தா 107, பெங்களூரு 104, மும்பை 98, பஞ்சாப் 96, ராஜஸ்தான் 66, ஐதராபாத் 62 ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முன்னதாக 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 731 சிக்ஸர்கள் (75 ஆட்டம்) எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. #VIVOIPL #IPL2018 #MostSixes
    ×