search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணை நீர்மட்டம்"

    • மாம்பழத்துறையாறு அணை ஒரே நாளில் 13½ அடி உயர்ந்தது
    • மயிலாடியில் 110.2 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளி களுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறை யாறு, திற்பரப்பு, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் நாகர் கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்ட மும் உயரத் தொடங்கி யுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப் பட்டுள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
    • இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    • 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 80.36 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கனஅடியும், அரக்கன்கோட்டை தடப்பள்ளிக்கு 800 கனஅடியும், குடிநீருக்காக 200 கனஅடியும் என மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை பகுதியில் நேற்று 5.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்தி ற்காக கீழ்ப்பவானி வாய்க்கா லுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது
    • பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது

    ஈரோடு,

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 892 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும் என மொத்தம் 3050 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.
    • இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட ங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.

    நேற்று காலை 6 மணியளவில் அணையில் 2. 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நேற்று பகலில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. படிப்படியாக மாலையில் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி நீர்வரத்து இருந்தது. 450 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டி.டி.எஸ். உப்புத் தன்மை 1800 ஆக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. அதிக அளவு வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் மதகுகளில் வெளியேற்றப்பட்டது.

    இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    ×