search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்மா"

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
    • அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் எர்ணாபுரம் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் மோகன் விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கினார். விதை சான்று அலுவலர் ரஞ்சிதா, உதவி விதை அலுவலர் பொன்னுவேல், உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
    • அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள், உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்வது, பயிர் சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து விளக்கினார்.

    வேளாண்மை அலுவலர் அன்புசெல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து எடுத்துக்கூறினார். சொட்டுநீர் உழவியல் நிபுணர் கிருஷ்ணா வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்தும், அதன் தேவையையும், அதற்கான அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

    பயிற்சியில் உழவன் செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்து பயன்ப டுத்தாத விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்து களை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட

    அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி வரவே ற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பழனியப்பன் பங்கேற்று விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வேளாண்மை அலுவலர் பழனிசாமி கோடை உழவு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவ

    லர் தங்கவேல் சோயா பீன்ஸ் பயிர் சார்ந்த திட்ட ங்கள் குறித்தும் பேசினர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட களப்பணியாளர்கள் செல்வி, கண்ணன் மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×