search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கேரிபாளையம்"

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் ,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காங்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது.

    ஆனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணி முழுமையாக முடியாமல் பாதியிலேயே பணிகள் நிற்கின்றன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சாலை பணி முழுமையாக முடியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த சாலையில் தனியார் பள்ளிகள் ,பல்வேறு பனியன் நிறுவனங்களும் உள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.காங்கிரீட் சாலையின் இரு புறங்களிலும் குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல் கான்கிரீட் போட்ட ஒரு சில இடங்களில் ரோடுகள் பெயர்ந்து பல்லாங்குழியாக கிடப்பதால் தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளதா? என சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    தெருக்களில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் முறையாக பாதாள சாக்கடைக்கு சென்று சேரும் வகையில் வழிகள் இல்லாமல் அவசர கதியில் ஏனோ தானோ என்று ரோடு போடப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்த சாலையை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து ரோடு பணியை முழுமையாக முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×