search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபோர்டு ஆஸ்பையர்"

    ஃபோர்டு நிறுவத்தின் புதிய ஆஸ்பையர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Ford #Aspire



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவில் புதிய ஆஸ்பையர் கார் ஐந்து வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ.5.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் விலை ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆஸ்பையர் காரின் முன்பக்கம் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் குரோம் சரவுன்ட்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், சி-வடிவம் கொண்ட குரோம் இன்செர்ட்கள், ஃபாக் லேம்ப், அகலமான ஏர்டேம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    காரின் பக்கவாட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட 15-இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லைட் கிளஸ்டர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கபப்ட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய ஆஸ்பையர் கார் தற்போதைய மாடலை விட முற்றிலும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடல்: வைட் கோல்டு, மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் கிரே, அப்சல்யூட் பிளாக், டீப் இம்பேக்ட் புளு, ரூபி ரெட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு வைட் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறத்தில் பிளாக்/பெய்க் டூயல்-டோன் தீம் மற்றும் டேஷ்போர்டு வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய ஆஸ்பையர் மாடலில் 6.5 இன்ச் SYNC3 ஃபுளோட்டிங் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரோகுரோமிக் IRVM, ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பிடி. அம்சம் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்-பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில்-லான்ச் அசிஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியன்ட் 1.5-லிட்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 99 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மூன்று இன்ஜின்களும் அதன் பிரிவுகளில் சக்திவாய்ந்தது என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
    ×