என் மலர்

  நீங்கள் தேடியது "Zero"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
  • பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

  சுவாமிமலை:

  உலக வெறிநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணத்தில் 'ஒன் ஹெல்த்ஜீரோ டெத்' அடிப்படையில் அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

  ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன், கால்நடை மருத்துவமனையில் டெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

  முகாமில் டெல்டா இன்னர் வீல் கிளப் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன், துணைத்தலைவர் வச்சலா கருப்பண்ணன், துணைச் செயலாளர் லட்சுமி பிரபாகரன், பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன், இதழாசிரியர் சந்திரா, ஐஎஸ்ஓ ஜெயந்தி, உறுப்பினர்கள் வைத்தியநாதன், பிரேமா பாலு மருத்துவ ஷெரின் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ், ரகுநாத், யாழினி தேவி, தேவ பிரசன்னா, கால்நடை ஆய்வாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிவேல், மதியழகன், கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  தொடர்ந்து பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle  சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் ஜீரோ. அதாவது எரிபொருளாக பெட்ரோல் தேவையில்லை, புகை கக்காது.

  இதனாலேயே இதற்கு ஜீரோ மோட்டார் சைக்கிள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேட்டரி மோட்டார்சைக்கிளில் புரட்சியை இது ஏற்படுத்தும் என்று நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.

  ஜீரோ எஸ்.ஆர்.எப். என இதற்கு பெயரிட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது 35 சதவீதம் கூடுதல் சக்திகொண்டது. ஸ்டைலான வடிவமைப்பு, கண்ணைக் கவரும் நிறம் ஆகியவற்றுடன் பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டதாக இது அறிமுகமாகிறது.  உயர் திறன் கொண்ட பேட்டரி மாடல் மற்ற மாடல் மோட்டார்சைக்கிள்களை விட 50 கிலோ வரை எடை கூடுதலாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஜீரோ எஸ்.ஆர். மாடலில் பேட்டரி அதன் பெட்ரோல் டேங்க் வடிவிலான முன்பகுதியில் உள்ளது. இந்த பேட்டரி திறனை 3.6 கிலோவாட் வரை அதிகரிக்க முடியும்.

  இது 70 ஹெச்.பி. திறனை வெளியிடுவதோடு 157 என்.எம். டார்க் திறனை வெளியிடக் கூடியது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 359 கி.மீ. தூரம் வரை செல்லும். பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். #shahrukhkhan #Dhanush #Zero
  இந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

  இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார்.

  இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், இந்தியில் முன்னணி நடிகராக வலம் நடிகர் மாதவன், தனது பிறந்த நாளை பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கொண்டாடி இருக்கிறார். #Madhavan #ShahRukhKhan
  ‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மற்றும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

  தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன், சில மாதம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜீரோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது பிறந்த நாளை ஜீரோ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.  அப்போது நடிகர் ஷாருக்கான், நடிகை அனுஷ்கா சர்மா, ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் படக்குழுவினர் மாதவனுக்கு வாழ்த்து கூறினார்கள்.
  ×