search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YouTube video delivery"

    அனுபவம் இல்லாதவர்கள் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#TNMinister #Vijayabaskar
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதனை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, சமூக வலை தளங்களில் வெளியாகும் வீடியோவை பார்த்து பிரசவம் பார்ப்பது போன்றவை நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்க செயலாகும். மருத்துவத்துறையில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

    குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் இறப்பு சதவிகிதமும் குறைந்துள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருகின்றனர்.

    இது போன்ற நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பிரசவத்தில் ஈடுபட வேண்டும்.

    இதனை மீறி வீடுகளில் பிரசவம் பார்ப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு யோகா, ஆயுஷ் போன்றவற்றை ஊக்குவித்து வருகிறது. சுகமான பிரசவம், தாய் சேய் நல பாதுகாப்பில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar

    ×