search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth"

    • சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது 5 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது அதில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. சுமார் 650 கிராம் எடை கொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 5 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து ச்சென்று நடத்திய விசாரணை யில், சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), கவுதம்(23), தங்கராஜ்(28), கோகுல்(20), காளிராஜ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியம்.
    • இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டுள்ளது.

    தங்கங்களே நாளை தலைவர்களே

    நம் தாயும் மொழியும் கண்கள்

    சிங்கங்களே வாழும் தெய்வங்களே

    நம் தேசம் காப்பவர் நீங்கள்

    -என்று மாணவர்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் தான் இவை. இது போன்ற எண்ணற்ற கவிஞர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி தேசத்தின் தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதில் உறுதியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மாணவர்களின் அறிவும், செயல்திறனும் உள்ளது.

    நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இன்றும் உலக அரங்கில் இளைஞர்கள் அதிகம் உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. அவர்களால் எந்த சவால்களையும் எளிதாக வென்று விட முடியும். எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் இடையே எழுந்து உள்ள மோதல் போக்கு பல்வேறு தரப்பினருக்கும் கவலை அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது.

    இன்றைய சூழலில் குடும்பங்களில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அவர்களை கையாளுவதில் மென்மையான போக்கே பெற்றோரிடம் இருக்கிறது. மேலும் அவர்களை முழு நேரமும் கண்காணித்து, கண்டிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் பிள்ளைகள் விரும்புவதை செய்து கொடுக்கவும், அவர்களின் எதிர்காலத்துக்காகவும் வேலை, வாழ்வாதாரம் என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் தன்வசதி ஒன்றையே பெரிதாக கருதிக் கொள்கிறார்கள். இதனால் சமூக ஓட்டத்தில் மற்றவர்களோடு இணக்கமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள தவறி விடுகிறார்கள்.

    ஆனால் மாணவ- மாணவிகளின் பெரும் பகுதி நேரம் பள்ளிக் கூடத்திலேயே கழிகிறது. எனவே அவர்களை கண்காணிப்பது, கையாளுவது என்பது ஆசிரியர்களுக்கு இயல்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்களால் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் சந்தேகம் தான். மேலும் மாணவ- மாணவிகளை கையாளுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    அதோடு இன்றைய மாணவ- மாணவிகளிடம் இருக்கிற தைரியம், மூர்க்கமான போக்கு போன்றவை ஆசிரியர்களையே அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இதனால் வகுப்பறைகளில் பாடங்களை நடத்தி முடித்து வெளியேறுவது என்பதே சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

    மேலும் வகுப்பறையில், மாணவ-மாணவிகளிடம் காணும் மாறுபாடுகளை சரி செய்வது குறைந்து வருகிறது. மேலும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு இருந்த பயம், மரியாதை இன்றைக்கு அர்த்தமற்றதாக மாறி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் வீட்டிலும், பள்ளியிலும் பரவலாக மாணவர்களுக்கு ஒரு கண்டிப்பற்ற சூழல் நிலவுகிறது. அதில் சில மாணவர்கள் குழு மனப்பான்மையில் ஒன்று சேரும் போது வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    அதுமிகமோசமாகி வீடு புகுந்து தாக்குவது போன்ற குற்றங்களை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்கிறது. அது மாணவ சமுதாயத்தின் மீதே தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வன்முறையால் அழிவு தான் நிகழும். ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்காது. மேலும் யார் மீதும் வன்முறை எண்ணம் இருக்க கூடாது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் அதிக எண்ணிக்கை யில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக நடைபெற்ற கவுன்சிலிங்கில் 40 ஆசிரியை கள் உள்பட 122 பேர், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம் என்று புறக்கணித்து விட்டனர். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பள்ளியில் நிர்வாக சிக்கல்கள் எழுகிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. பள்ளிச் சூழலிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள், கடிவாளம் இல்லாத குதிரை போல் ஆகி விடுகிறது. அது ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதிக்கப் படுகிறது. எனவே தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    இது மட்டுமின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்- ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. அப்போது தான் மாணவ- மாணவிகளின் படிப்பு மட்டுமின்றி சமூக நலப் பண்புகளை மேம்படுத்தி நல்லிணக்கத்தை கொண்டு வருவதில் வெற்றி காண முடியும். அதற்கான தொழில்நுட்ப தொடர்பு வசதிகள் தற்போது துணையாக இருக்கிறது. அதன் வழியாக கலந்துரையாடல் நிகழ்கிற போது மாணவர்கள் மத்தியில் இயல்பான மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படும்.

    தற்போது டி.வி., செல்போன், சமூக வலைத்தளங்கள், சினிமா, அரவணைப்பு அற்ற நிலை என்று ஏராளமான புறச்சூழல்கள் உள்ளன. அவை மாணவர்களிடம் ஆக்ரோஷத்தையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைந்து இருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டதாக 2019-ம் ஆண்டு - 2,686 வழக்கு, 2020-ம் ஆண்டு - 3,394 வழக்கு, 2021-ம் ஆண்டு - 2,212 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதோடு பள்ளி மாணவர்களிடம் வேகமாக பரவும் தவறான பழக்கம் அவர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது போன்ற நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், நெறிப்படுத்தி கண்டிக்க கூடிய தோழமைகள் குறைந்து விட்டனர். இதனால் சில மாணவர்கள் மனம் போன போக்கில் எதிர்காலம் குறித்த அச்சமின்றி குற்றம் செய்ய துணிகின்றனர்.

    இதனால் மாணவர் சமூகம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மாணவர்களின் அடையாளம் என்பது கல்வி கற்பது மட்டும் தான். எனவே வகுப்பறை சூழலை கொண்டாடுவதன் மூலம் தான் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்த வேண்டும். அதை விடுத்து வன்முறை எண்ணத்தில் வேறுவிதமான செயல்களில் ஈடுபட்டால் எதிர்காலம் பாதிக்கும்.

    எனவே மாணவர்களை சரிப்படுத்த அன்பான வார்த்தைகள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு கண்டிப்பான பார்வையும் மிகமிக அவசியம். வேறுபாடுகளை மறந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தான் சீருடை வழங்கப்படுகிறது. அதற்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு. அத்தகைய சீருடை அணிந்த மாணவ- மாணவிகள் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உயர்கல்வி கற்று புகழ் பெற வேண்டும். அது தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல மனித சமூகத்துக்கும் நலம் அளிக்கும் என்பதை மாணவ- மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

    • சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் கார்த்திக்குக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எபனேசர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார்.
    • அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ் புரத்தை சேர்ந்தவர் எபனே சர். ( வயது 24 ). இவர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் 'லிப்ட்' கேட்டு ஏறினார்.

    சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி எபனேசரை வாகனத்தை நிறுத்த சொல்லி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

    பின்னர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி கங்கா ராஜேஸ்வரி காலனி சேர்ந்த மகேஷ் குமார் (24),வடக்கு சங்கரபேரியை சேர்ந்த அஜித்குமார்( 23 ), குறிஞ்சி நகர் சேர்ந்த அருண்குமார் (25 )மற்றும் ஈஸ்வரன் (42) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • நேற்று முன்தினம் இரவு தனது 21 வயது காதலியுடன் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடையின் கீழ் இரவு 10 மணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்.
    • அதன்பிறகு அந்த 2 பேரும் இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்குள் அழைத்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது 21 வயது காதலியுடன் தெற்கு பீச் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடையின் கீழ் இரவு 10 மணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை வழிமறித்து மிரட்டினர். பின்னர் காதலனை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தார்கள். அதன்பிறகு அந்த 2 பேரும் இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உப்பளத்துக்குள் அழைத்து சென்றனர்.

    அங்கு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர், அந்த பெண்ணை மீண்டும் கடற்கரை சாலையில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார். இது தொடர்பாக அந்த இளம்பெண் போலீசார் புகார் செய்தார். அதன்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த யோசோப்பு என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை யோசோப்பைதூத்துக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர். 

    • கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.
    • தொழிலாளி கொலை வழக்கில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி.

    இவரை அதே பகுதியை சேர்ந்த வடிவேலு (35) என்பவர் முன்விரோதம் காரணமாக கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கையா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய வடிவேலுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த வடிவேலு புதுக்கோட்டை கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 ல் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    • 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
    • முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.

    அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.

    அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.

    • முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி யன் மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு லிருந்தினர்களாக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும், சிறப்பு விருந்தினராக தாமரை இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீபத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது ரோட்டரி சங்கத்தின் பயன்பாடுகள் குறித்தும், மாணவர்களாகிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர். மேலும், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கருணா ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் பேசினார்.

    முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ரோட்டரி கிளப் செயலாளர் தார்சியஸ் நன்றி கூறினார்.

    விழாவில் ஆசிப்அலி, விஜயகுமார், ரமேஷ்குமார், சங்காரம், கண்ணன், நரேஷ்குமார் ஆகிய ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருது பாண்டியர் கல்லூரி ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களில் 5.60 லட்சம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 206 நபர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற 7 முகாம்களின் மூலம் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், காவல்துறை துணைத்தலைவர் (சத்தீஸ்கர்) விஜயகுமார் டோக்ரா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், மத்திய வேளாண்மை இயக்குநர் வெங்கட சுப்ரமணியன், இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட் ராகுல் ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை அடுத்த சூரியனூரை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • தாயை காப்பாற்ற சென்றதால் மகனுக்கு அரிவாள் வெட்டு காயம்

    கரூர்

    குளித்தலை அடுத்த, சூரியனுாரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). விவசாயி கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த பாரிவேந்தன் (32), கூலி தொழிலாளி. பாரிவேந்தன், விஜயை தகாத வார்த்தை பேசி திட்டியுள்ளார். இது குறித்து விஜய் அவருடைய தாயிடம் தெரிவித்தார்.

    இது குறித்து தட்டி கேட்க வந்த விஜய் தாயை , பாரிவேந்தன் அரிவாளால் வெட்ட முயலும் போது, அதை தடுத்த விஜயின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் விஜய்க்கு ரத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளித்தலை போலீசார், பாரிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • ஈஸ்வரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 52). நேற்று அவர் வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தட்டி கேட்ட பழனியம்மாளை அந்த வாலிபர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பழனியம்மாள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் பழனியம்மாளை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஈஸ்வரன் (வயது 37) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்தது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டா னாவில் தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி கலந்து கொண்டு வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு சைவ உணவு, 5 விதமான பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் வீரப்பன், சண்முகம், ஸ்டாலின்சுகுமார், சுகுமார் ஜாகிர், நாசர், பாரூக், அன்சாரி மற்றும் தி.மு.க. நகர இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×