search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man"

    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
    • செந்தில் தூக்குப்போட்ட நிலையில் தோட்டத்தில் பிணமாக தொங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    மனைவி பிரிந்து சென்றார்

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கிருபாகரன் (40). இவர்கள் 2 பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செந்திலை பிரிந்து அவரது மனைவி குமரி மாவட்டம் பால் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அரிவாள்வெட்டு

    இதற்கு கிருபாகரன் தான் காரணம் என்று நினைத்து செந்தில் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இந்த அரிவாள் வெட்டு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாக பரவின.

    இதில் படுகாயம் அடைந்த கிருபாகரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் நேற்று இரவு செந்திலை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது அங்குள்ள தோட்டத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று செந்தில் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் செந்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • போதையில் டிரான்ஸ்பார்மரில் ஏரி வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • படுகாயமடைந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகே இன்று காலை 3 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் குடிபோதையில் சத்தம் போட்டபடி இருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் தமிழகத்தில் வடமாநில வாலிபர்கள் யாரும் இருக்ககூடாது. தமிழருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர்களை வெளியேற்றவேண்டும் என கூறினார். மேலும் அங்கிருந்த பேரிகார்டுகளை கீழே தள்ளி சாலையில் அமர்ந்து சத்தம்போட்டார். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய பஸ்களும் செல்ல முடியாமல் நின்றன.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் சத்தம்போட்டபடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கூச்சலிட்டார். உடனடியாக அவரை இறங்குமாறு போலீசார் எச்சரித்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பை துண்டிக்குமாறு கூறினர்.

    ஆனால் அதற்குள் அங்கிருந்த வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டார். மேலும் பஸ்நிலைய சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின்வினியோகமும் தடைபட்டது.

    பின்னர் படுகாயமடைந்த அந்த வாலிபரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தருமத்துப்பட்டி கோம்பை பகுதியை சேர்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன்(20) என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த வேல்முருகன் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

    பணகுடி:

    பணகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் தலைமை காவலர் லட்சுமி நாராயணன், காவலர் சரவணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்டையார்குளத்தை சேர்ந்த கவுதம் (24), வசந்தகுமார் (20) ஆகியோர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள்

    பணகுடியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் ேலப்டாப்பை கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார்.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    வாலிபர் கைது

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த ஒரு வாலிபரை சோதனை செய்த போது அவர் கைத்துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டினார்.

    மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த பால்துரை (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளது.

    குண்டர் சட்டம்

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    அதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ்குமார் உத்தரவின்படி பால்துரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    நெல்லை:

    பாளையை அடுத்த சீவலப்பேரியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பேச்சிமுத்து(வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(22) மற்றும் அவரது சகோதரர் சங்கரபாண்டியன்(21) ஆகியோர் பேச்சிமுத்துவை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அவர் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வக்குமார் மற்றும் சங்கரபாண்டியனை கைது செய்தனர்.

    • பாளை தியாகராஜநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.
    • அவரை 3 பேர் கும்பல் வழிமறித்து தாக்கி 5 பவுன் தங்கநகையை பறித்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் விஸ்வபெருமாள் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சிவசரவணக்குமார்(வயது 28) என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்துவிட்டார். சிவசரவணக்குமார் படித்து முடித்துவிட்டு பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    பாளை தியாகராஜநகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து சிவசரவணக்குமார் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நான்குவழிச்சாலை வழியாக கங்கைகொண்டானுக்கு சென்றுள்ளார்.

    பாளை பொட்டல் விலக்கு பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது. பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கநகையை பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.

    இதில் காயம் அடைந்த சிவசரவணக்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    • டி‌. கல்லுப்பட்டி அருகே மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • திடீரென மழை பெய்ததால் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. கல்லுப்பட்டி போலீஸ் சரக்கத்திற்கு ட்பட்ட எம்.சுப்புலாபுரம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த் (வயது 23). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்தது.

    உடனே அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் பிரசாந்த் மழைக்கு ஒதுங்கினார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக முறிந்து கீழே நின்றிருந்த பிரசாந்த் மீது விழுந்தது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அப்ப குதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • லைசென்ஸ் எடுக்க தனது பெற்றோரிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.

    நெல்லை:

    அம்பைைய அடுத்த கோடாரங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் பூல்மாடன்(வயது 27).

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூல்மாடனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூல்மாடன் வாகனம் ஓட்டி படித்துவிட்டு அதற்கு லைசென்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார். லைசென்ஸ் எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது.

    உடனே அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், சிறிது நாட்கள் கழித்து லைசென்ஸ் எடுத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த பூல்மாடன் கோபத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
    • இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துராஜ்

    ( வயது20).

    இவர் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சண்முக வேல் என்ற ரெங்கன் (27) என்பவர் முத்துராஜை வழி மறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ் மறுத்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்

    டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல் முத்துராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் முத்துராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மாணிக்கம்(வயது 25). இவர் தற்போது நேதாஜி நகரில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.

    இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இவர் மீது ஆலங்குளம் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    • இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ(வயது28). இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் பிரிட்டோ மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரிட்டோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகிரி அருகேயுள்ள உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை அருகில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.
    • கைதானவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி காவல் சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி, ராயகிரி பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகிரி அருகேயுள்ள உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை அருகில் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிவகிரியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 20) மற்றும் ராயகிரியைச் சேர்ந்த ராஜ்கண்ணன் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் 200 கிராம் அளவு கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×