search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man"

    • மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா (வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கும், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா(வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    திருமணத்திற்கு பின் லெட்சுமணன் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ஜெய சுதாவின் 10 பவுன் நகைகளை பெற்று அடமானம் வைத்துள்ளார். அதுபோல அவரது சகோதரர் அய்யப்ப னுக்கு, ஜெயசுதாவின் 5 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி ஜெயசுதா தட்டிக்கேட்டதால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின் லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 லட்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து மனுவில் கையெழுத்து போடும்படியும் மிரட்டி கையெழுத்தை பெற்று நாங்குநேரி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயசுதாவிற்கு தெரியாமல் லெட்சுமணன் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த தங்கசெல்வம் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த ஜெயசுதா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன், உறவினர் தங்க செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
    • சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.

    வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார்.
    • இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கல்லூரி முடித்து விட்டு எல்.ஐ.சி காலனியில் தையல் கடை யுன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடைக்கு எதிரே உள்ள ஓட்டலில் கோவை காந்தி பார்க்கை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவர் எதிரே உள்ள தையல் கடைக்கு சென்று இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து நந்தகுமார், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். சம்பவத்தன்று, இளம்பெண் ஆர்.எஸ் புரத்தில் உள்ள வங்கி பயிற்சி வகுப்பிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த நந்தகுமார் இளம் பெண்ணை வழிமறித்து மீண்டும் தனது காதலை கூறினார். இதில் கோபமடைந்த இளம்பெண் அவரது காதலை ஏற்பதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் இளம்பெண்ணை கழுத்தை பிடித்து நெரித்து, கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரிடம் தகராறு செய்து செல்போனையும் பறித்தார். அப்போது, அங்கு வந்த இளம்பெண்ணின் தாயார் தனது மகளை வாலிபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார்.

    அப்போது இருவரையும் நந்தகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாங்குநேரி ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • அந்த வழியாக வந்த ெரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார்.
    • செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 32). இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராமு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கருங்குளம் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி இசக்கிராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.

    சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. 

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தருவைகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாளை சீவலப்பேரி அருகே வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    பாளை சீவலப்பேரி உலகம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொள்ளமுத்து. ஆட்டோ டிரைவர். இவரது மகன் முண்டசாமி(வயது 29).

    இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முண்டசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

    நேற்றும் அவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த முண்டசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.
    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று இரவு தனது மோட்டார்  சைக்கிளில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்க த்தினர் அவர்களை மீட்டனர். 

    பின்னர் வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

    முத்துக்குட்டி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மங்கலம்

    முதுகுளத்தூரில் இருந்து ஒரு அரசு பஸ் ராமநாதபுரம், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் சென்றது. அந்த பஸ் அ.மணக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரோட்டின் குறுக்கே நின்று பஸ் டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

    அதனை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ஜான்போஸ்கோ (வயது 40) என்பவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அ.மணக்குடியைச் சேர்ந்த கிராமத்தினர் பஸ் நிறுத்தம் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஜான் போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார். 

    நெல்லையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பார்வதி. இவர் சம்பவத்தன்று இரவு வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

     அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒரு வாலிபர் பார்வதி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டவாறு செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    இதில் செயின் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில் அவர் கேரளாவை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், வி.எம். சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விடுமுறையில் வந்தபோது செலவிற்கு பணம் இல்லாததால் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்த ரித்திக்கை போலீசார்  கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பார்வதி அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. எனினும் குற்ற செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  
    பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மார்ஷலின் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மார்ஷலின் நெல்லையில் வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.இதனால் மார்சலின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×