என் மலர்

  நீங்கள் தேடியது "Yoga Day"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளையில் நாளை மறுநாள் யோகா தின நிகழ்ச்சிகள் நடக்கிறது.
  • 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

  நெல்லை:

  நேரு யுவகேந்திரா, நெல்லை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 2,000 மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.

  இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் சிவசங்கர், அமல்தாஸ், செயலாளர் அழகேச ராஜா, துணைச்செயலாளர் அதிசயராஜ், செயற்குழு உறுப்பினர் சங்கர ராமசுப்பு ஆகியோர் செய்து வருகின்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட விளையாட்டு, வனத்துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

  இதில் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்ய வந்தால் அந்த பள்ளிக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த விபரங்களை அறிய சங்க செயலாளர் அழகேசராஜாவை 9659819009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
  நியூயார்க்:

  4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

  இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

  இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

  நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InernationalYogaDay
  புதுடெல்லி:

  பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.  4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

  வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.

  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.

  21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.

  தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.

  பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

  யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

  யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Yoga #InernationalYogaDay
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  4 ஆயிரம் கர்ப்பிணிகள், 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்பட குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றேகால் கோடி மக்கள் பங்கேற்கும் யோகாசன முகாம்கள் நாளை நடைபெறுகின்றன. #YogaDay #GujaratYogaDayevents
  அகமதாபாத்:

  சர்வதேச யோகாசன தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவிலான யோகாசன முகாம்களை நடத்த மாநில அரசு அதிகாரிகளும், பா.ஜ.க.வினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். டேராடூன் நகரில் நடைபெறும் யோகாசன முகாமில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

  இந்நிலையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் 750 முதல் 1200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் அமைதி யோகாசன முகாம் நாளை நடைபெறவுள்ளது.

  முதல் மந்திரி விஜய் ருபானி, கவர்னர் ஓ.பி.கோஹ்லி, மாநில மந்திரிகள் குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாத் ரெட்டி உள்ளிட்டோர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

  மேலும், மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 377 இடங்களில் நடைபெறும் யோகாசன முகாம்களில் 4,082 கர்ப்பிணி பெண்கள், 8,732 மாற்றுத்திறனாளிகள் என சுமார் ஒன்றேகால் கோடி மக்கள் பங்கேற்பார்கள் என குஜராத் மாநில கல்வித்துறை மந்திரி பூபேந்தர்சின்ஹ் சுடசாமா இன்று தெரிவித்துள்ளார். #YogaDay #GujaratYogaDayevents
  ×