search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers"

    • நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.

    • விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 976 தொழிலாளர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ், மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலா ளர்களுக்கான 42-வது ஆண்டு விஜயதசமி விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார்.

    மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, ஸ்ரீகண்டன் ராஜா, பி.ஜே. ராம்குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார். விழாவில் ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் பல்வேறு நீண்ட கால சலுகைகள் பற்றி பேசினர்.

    விழாவில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், தொழி லாளர்கள் அர்ப்பணிப்பு கலந்த உணர்வோடு பணிபுரிந்து வருவதால் இந்த நிறுவனம் 83 வருடம் இளமையா னதாகவும் மற்றும். உத்வேகம் கலந்த நிறுவனமாகவும் திகழ்கிறது என கூறினார்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றி 15 முதல் 35 வருடம் சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்கள், தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 976 தொழி லாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் பிரசிடெண்ட் மோகன் ரங்கன், மூத்த பொது மேலாளர் சந்தோஷ், பொது மேலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகஅதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    • தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
    • நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.

    தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.

    தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.

    • பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் வழங்கினார்
    • தபால் நிலையம் எதிரில் எதிரில் சரஸ்வதி பூஜையை கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 300- க்கும் மேற்பட்டோர் முதலியார் பேட்டை தபால் நிலையம் எதிரில் எதிரில் சரஸ்வதி பூஜையை கொண்டாடினர்.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கி, நினைவு பரிசு வழங்கினார்.

    விழாவில் வெற்றிச்செல்வம் பேசும்போது புதுவை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய மாநில அரசு மூலம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிடத் தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் முருகன், முனியாண்டி, சேகர் ,பக்கிரிசாமி, ரவி , வீரப்பன், ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. திட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெய்வராஜ், அரவிந்தன் மற்றும் முத்துலட்சுமணன், செல்வராஜ், அறிவழகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் குருவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை நேரடியாக வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
    • அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிஐடியூ., பனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ., பனியன் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில், திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.

    அதில், தற்போது கடுமையாக உயா்ந்து இருக்கும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபா் 17-ந்தேதி முதல் 26 -ந்தேதி வரை திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், எல்.பி.எப். பனியன் சங்கத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. செயலாளா் அ.சிவசாமி, எம்.எல்.எஃப். பனியன் சங்க செயலாளா் மனோகரன், எச்.எம்.எஸ். செயலாளா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து தினம் ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
    • பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது.

    இதனை 200 நாட்க ளாக மாற்றி தினந்தோறும் ஊதியமாக ரூ.600 வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 40 முதல் 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    அதிலும் 1 கோடியே 31 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 80 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊதிய த்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இந்த வேலை திட்டத்தில் பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    அவர்கள் தினமும் பார்க்கும் வேலையை சரியாக அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தினமும் மொபைல் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கைவிட வேண்டும்.

    மேலும் பல இடங்களில் குறிபிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த குறைபாட்டை களைந்து சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் சந்திரகுமார், சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ,தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டதா என ஆய்வு நடை பெற்றது.
    • 131 நிறுவனங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தொழிலாளா்களின் சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என கடைகள், நிறுவன ங்கள், உணவு நிறுவ னங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 131 நிறுவ னங்களில் தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்கள் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளி ன்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 68 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும், மோட்டாா் நிறுவன ங்களில் 6 முரண்பாடுகளும் என மொத்தம் 118 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மே ற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
    • சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்துக்காக சொந்தமாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி டாக்டர் வி.என்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள். கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    ரியல் எஸ்டேட் தொழிலாளால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளம் கொண்டு கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் நடைபெறும் சங்க கட்டிட திறப்பு விழாவில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர்.
    • ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் 100 நாள் வேலை செய்து நடந்து வருகிறது.

    இந்த பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மது பாட்டில்கள், முள்புதர்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அவ்வப்போது காயமடைந்து வருகின்றனர்.

    இந்த ஏரியை கிருமாம்பாக்கம் கோவில் சார்பில் குத்தகை விடப்பட்டு அதிக விலைக்கு ஏலம் எடுத்து மீன் வியாபாரம் நடந்து வரும் இந்த ஏரியில் 100நாள் ஆட்களை கொண்டு ஆகாய தாமரை அகற்றுவது பலரையும் கேள்வி எழுப்ப செய்கிறது.

    100 நாள் வேலைக்கு பல வாய்க்கால்கள் குளங்கள் இருந்தும் அதனை கண்டறிந்து இன்று வரை தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் பகுதியில் சாவடி குளம் என்னும் குளம் ஊருக்கு மத்தியில் இருந்து வருகிறது.

    இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.

    100 நாள் வேலையில் இயந்திரத்தைக் கொண்டு ஊரக தொழிலாளர்களை கொண்டு சாவடிகுளத்தை தூர்வார வேண்டும். மேலும் பல குளங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருமாம்பாக்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

    தர்ணா போராட்டம்

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

    மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

    மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

    எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×