search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers protest"

    • திருச்சி டாஸ்மாக் அதிகாரியை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள்

    திருச்சி:

    தஞ்சாவூர் காமாட்சிபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது 55). இவர் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், மாவட்டத் துணை தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

    நான் திருச்சி டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளியாக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். இதனை தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் துணை ஒப்பந்ததாரர்களையும் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் மேற்கண்ட ஒப்பந்ததாரர்களிடம் நான் உட்பட 50 பேர் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

    தற்போது துணை ஒப்பந்ததாரர் மற்றும் அவரது கூட்டாளிகள் சரக்கு ஏற்றி இறக்கும் ஒப்பந்த தொழிலாளர்களாகிய எங்களிடம் ஒரு சரக்கு பெட்டிக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.

    சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாலதி முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தலாம் என்றார். அதற்கு பா.ஜ.க. தரப்பில் எப்போது, எங்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை எழுத்துப்பூர்வமாக பதிலாக தாருங்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதையத்து நேற்று ஈஸ்வர மூர்த்தியை முதன்மை பிளாண்டு மேலாளர் கிரிஸ் வரதராஜன் என்பவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். இதில் 74 தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பலர் குவிந்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    மேலும் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்தார். தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • எவ்வித காரணமும் கூறாமல் தங்களை வேலையிலிருந்து நீக்கியதால் திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • இச்சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பேருக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு அருகில் உள்ள பூஞ்சோலை பகுதியை சேர்ந்த 45 பேர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வித காரணமும் கூறாமல் பணித்தள பொறுப்பாளர் தங்களை வேலையிலிருந்து நீக்கியதால் திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் தெரிவிக்கையில் உங்களது ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்திருந்தால் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்காது.

    எனவே மீண்டும் உங்களது ஆதார் நகலை கொடுத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் பணி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது.
    • தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்

    பெரம்பலூர்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை செயலாளர் சிங்கராயர் தலைமை தாங்கினார்.

    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் கிளை செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது.

    ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பட்டது.

    • திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் குறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதியம் சீரமைப்பு குழு பரிந்துரையின்படி அரசு பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்கவேண்டும். 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ உயர்வை வழங்கவேண்டும்.

    ஏப்ரல் 2020 முதல் ஓய்வு, விருப்ப ஓய்வு, இறந்த தொழிலாளர்களுக்கு பணபலன் நிலுவையில் உள்ளது. அதனை உடனே வழங்கவேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் அய்யப்பன், பேரவை செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    ×