என் மலர்
நீங்கள் தேடியது "worker"
- தன்னுடன் வேலை பார்க்கும் தனது உறவினரான சுரேஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
- பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மரக்கட்டையால் சுரேசை தாக்கினார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடுவெட்டி க்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம். இவர் திருப்பூரி ல்பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தன்னுடன்வேலை பார்க்கும் தனது உறவினரான நாகையை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையி இருவருக்கும் இடையே குடி போதையில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில்மாணிக்கம் ஆத்திரம் அடைந்து மரக்க ட்டையால் சுரேசை தாக்கி னார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதையடுத்து மாணிக்கம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து பட்டுக்கோ ட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
- மலைச்சாமி காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54), கட்டிட தொழிலாளி. வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு நாகராஜ் கரிசல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேல க்கோட்டை பெரியார் காலனி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பழுதாகி நின்று கொண்டி ருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நாகராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மலைச்சாமி காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு மாவு மில்லில் வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு மாவு மில்லில் உத்திரப்பிரதேச மாநிலம் முஸ்தபாத் அருகிலுள்ள முசாத்பூர் பகுதியைச் சேர்ந்த பரோனி என்பவரின் மகன் சுக்பீர் (வயது22) என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
இவர் மில் உரிமையாளருக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுக்பீர் செல்போனில் அவரது குடும்பத்தினரிடம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவர் நேற்றும் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் பணி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குடியிருந்து வரும் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 7 மணி அளவில் சுக்பீர் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அவரை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் பால முரளி கிருஷ்ணன் (49). இவரது அண்ணன் மாரியப்பன் (51).தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.
மாரியப்பனுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக காலில் புண் ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து சம்பவத்தன்று பாலமுரளி கிருஷ்ணன் தனது அண்ணன் மாரியப்பனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில், காலில் ஏற்பட்டிருந்த புண் காரணமாக வலி அதிகமானதால், நேற்று முன் தினம் மாலை மாரியப்பன் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார்.
இதையடுத்து, மாரியப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இதனால் அன்பழகன் மன வேதனையில் இருந்து வந்தார்.
- அப்போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
திருவாரூர்:
வலங்கைமான் அருகே நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் அன்பழகன் (வயது35). தொழிலாளி.
குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்பழகன் மன வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வலங்கைமான் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அன்பழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்
- படுகாயம் அடைந்த நண்பருக்கு தீவிர சிகிச்சை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனதூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 18), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் உதயகுமார். இவர்கள் 2 பேரும் மதனத்தூரில் இருந்து தா.பழூர் நோக்கி மொபட்டில் சென்றனர். அப்போது அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (30) என்பவர் காரைக்குறிச்சியிலிருந்து அண்ணங்காரம்பேட்டைக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். தா.பழூர் செல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன்தாஸ், உதயகுமார் ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தார். பின்னர் உதயகுமார் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற தொழிலாளி வாகனம் மோதி பலியானார்.
- இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40). இவருடைய மனைவி சுபத்ரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாகராஜ், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி படகுகளுக்கு சப்ளை செய்யும் பணி செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் நேற்று கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு நான்குவழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிய வாகனம் குறித்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
- டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது.
- உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.
கொண்டலாம்பட்டி:
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை சன்னியாசிகுண்டு அருகே உள்ள பகுதியில் விஜயகுமார் (வயது 45) என்பவர் பழைய பஸ் லாரிகளை வாங்கி, உடைக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் இன்று காலை 11.30 மணி அளவில் பழைய அரசு பேருந்தை வாங்கி வந்து உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஓமலூர் அருகே உள்ள தண்ணீர்தொட்டி நாரன்பாளையம் பகுதியை சேர்ந்த பங்க்ராஜ் (50) என்ற தொழிலாளி கியாஸ் கட்டிங் மூலம் அந்த பேருந்தின் டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது. மேலும் டேங்க் முழுவதும் தீ பற்றி எரிந்தது.இதில் படுகாயம் அடைந்த பங்க்ராஜ் அலறி துடித்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ஊழியர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.
உடல், கை, கால், முகம் போன்ற பகுதிகளில் தீக்காய மடைந்த பங்க்ராஜ் -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- கருத்து வேறுபாடு காரணமாக ராமரின் மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.
- தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் ராமர் (வயது38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ராமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ராமரின் மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராமர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற தாளமுத்துநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (40) என்பவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர். பாரப்பத்தி பகுதியில் சென்றபோது கியாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வெள்ளைச்சாமி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகே 4-ம் ரெயில்வேகேட் பகுதி வி.எம்.எஸ்.நகர் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் அதனை அங்கே நிறுத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகே உள்ள 4-ம் ரெயில்வேகேட் பகுதி வி.எம்.எஸ்.நகர் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அருகே அவரது மோட்டார் சைக்கிளும் நின்றது.
தற்கொலை
இதனை பார்த்த அப்பகுதியினர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் பலியானவர் தூத்துக்குடி 1-ம் கேட் காமாட்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சுதொழிலாளி செல்வம் (வயது44) என்பது தெரிவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் அதனை அங்கே நிறுத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணை
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து செல்வம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றார். செல்வத்திற்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
- தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் நேற்று தாரமங்கலம் வந்துவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.பவளத்தானுர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அசோகன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அசோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.