search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Hockey match"

    ஆசிய விளையாட்டு இன்று நடக்கும் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianGames #WomensHockey
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றது.

    இந்தோனேஷியா (8-0), கஜகஸ்தான் (21-0), தென்கொரியா (4-1), தாய்லாந்து (5-0) ஆகிய அணிகளை வீழ்த்தியது.

    அரை இறுதியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கியில் இந்தியா கடைசியாக 1982-ம் ஆண்டு தங்கம் வென்றது.

    1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தென்கொரியாவிடம் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றது. 2006, 2014-ம் ஆண்டுகளில் வெண் கல பதக்கம் வென்றது.

    தோல்வியே சந்திக்காமல் இந்தியா இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறது. இதுவரை 39 கோல்கள் அடித்து இருக்கிறது.

    ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டு கொடுத்து இருக்கிறது. நவ்ஜோத், நவனீத்கவுர், எக்சா, குருஜித் கவுர், மாலிக், தீபிகா, ரீனா போன்ற வீராங்கனைகள் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜப்பான் அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 36 ஆண்டுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்று சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்கள் ஹாக்கி அரை இறுதியில் இந்தியா தோற்றது. மலேசியாவிடம் ஷிட்- அவுட்டில் 6-7 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

    இதையடுத்து நாளை வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    குத்துச்சண்டை போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவில் அரைஇறுதியில் இந்திய வீரர் அமித்பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோவை சந்திக்கிறது.

    இதேபோல் ஆண்களுக்கான 75 கிலோ எடை பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன்- கஜகஸ்தானின் அபில்கான் அமன்குல் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    இன்று நடந்த ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ராஜ்விந்தர் கவுர் சீனதைபே வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். #AsianGames #WomensHockey
    ×