search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman"

    • குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் குமார்(34). இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள சகோதரியை பார்த்துவிட்டு அன்று இரவு தேனி செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குமாரி டம் திருநங்கை ஒருவர் ஆசை வார்த்தை கூறி ஒரு ஆட்டோவில் 5 ரோடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே குமாரிடம் இருந்த செல்போனிலிருந்து வேறொரு செல்போன் எண்ணிற்கு கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அனுப்ப வைத்துள்ளார்.

    பின்னர் குமாரிடம் தகராறு செய்து ஆட்டோவில் இருந்து குமாரை கீழே இறக்கி விட்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இது குறித்து குமார் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கை நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் . இவரது மனைவி ஜெய ரஞ்சனி (வயது 31). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது திடீரென கட்டு விரியன் பாம்பு கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயரஞ்சனி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் கடத்தல்
    • இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை

     திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெருபகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா வயது 26 இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதற்கிடையே ராதாவை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் காதலித்து வந்த தகவல் கிடைத்தது ஆகவே அவர் ராதாவை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..

    இதுகுறித்து காந்தி ஸ்ரீரங்கம் போலீஸ் புகார் செய்தார போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள வேப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நவீன் (வயது 21) என்பவர் தனது தாய் சவுந்தரம் (45) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

    இதில் தாயும் மகனும் ரோட்டில் விழுந்தனர். தாய் சவுந்திரத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட மண்டலகோட்டை கிராமமான மேலத்தெருவைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 50).

    இவரது மனைவி ஞானசகாய மேரி (வயது 45).

    இவர் சமையல் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவதன்று தனது மோட்டார்சைக்கிளில் ஞானசகாய மேரி பணிக்கு சென்றார்.

    பின்னர் வீடு திரும்பினார்.

    மதுக்கூர் அடுத்த மன்னார்குடி சாலை கண்ணாற்று பாலம் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஞானசகாய மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்
    • ஆவணி மாதம் திருவிழா

    புதுக்கோட்டை

    கோட்டைப்பட்டினம் ராம் நகரில் பிரசித்தி பெற்ற சோனை கருப்பன் மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அந்த முளைப்பாரியை கடலில் கரைத்தனர்.

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூரில் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல் நடைபெற்றது
    • மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது மங்கையற்கரசியை கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மங்கையற்கரசியின் தலையின் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிகொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்
    • கொலையான பெண்ணின், கணவரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நவரத்தினாநகரை சேர்ந்தவர் பிரம்மன்(வயது 50 ). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள் 47) .

    இவர்களுக்கு பாண்டி (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது சொந்த வேலையாக மகள் வெளியூர் சென்றிருந்தார். பாண்டி வேலைக்கு சென்றுவிட்டார். சுப்பம்மாள் வீட்டிற்குள்ளும், பிரம்மன் வீட்டின் ெவளியே யும் தூங்கிக் கொண்டிரு ந்தனர்.

    இந்நிலையில் பணி முடித்து வீட்டிற்கு பாண்டி வந்தார். அப்போது கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பா ர்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.

    இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவ ர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த அற ந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பம்மாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து கணவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    • வணிக வரித்துறை பெண் அலுவலரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டிதேவி (வயது36). இவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி வணிக வரித்துறையில் பணியாற்றும் குருராஜ் என்பவரின் மனைவி சித்ராதேவி அறிமுக மானார். அப்போது எங்கள் அலுவலகத்தில் காலிபணியிடம் இருப்பதாகவும், அதில் சேர நேர்முக கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.

    இதற்கு செலவாகும் என தெரிவித்ததால் நான் பல்வேறு தவணைகளில் சித்ராதேவியிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தேன். அதன்பின் அவர் அரசு வேலைக்கான ஆணையை கொடுத்தார். அதை சம்பந்தப்பட் அலுவலகத்தில் காண்பித்தபோது போலி யானது என தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மோசடி புகார் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை பெண் அலுவலர் சித்ராதேவியை தேடி வருகின்றனர். அரசு அலுவலர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அஸ்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.புதூர் சம்பக்குளம் ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அம்ரிதா (30). இவர் தனது ஸ்கூட்டரில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குழந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென அம்ரிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் அம்ரிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×