search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman killed"

    • பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    கோவை,

    கோவை இருகூர்-போத்தனூருக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அருகே பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர் யார்? ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • புவனகிரி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகே ஸ்வரன். இவரது மனைவி வெற்றிச்செல்வி .(வயது 50) இந்நிலையில் உமா மகேஸ்வரன் மனைவி வெற்றிச்செல்வி உடன் தனது மோட்டார் சைக்கி ளில் புவனகிரி கடைவீதிக்கு சென்றனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை எதிர்பாராத உமா மகேஸ்வரன் நாய் மீது மோதினார்.

    இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மேல்சிகிச்சைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வெற்றிச்செல்வி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
    • அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலியானார்.
    • பணிக்கு சென்ற போது நடந்த சம்பவம்

    திருச்சி:

    திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி, 15-வது தெருவில் வசித்து வருபவர் குமாரமங்கலம் மகள் காயத்ரி (வயது25) இவர் பி.இ. பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றார். ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்ற பொழுது அவ்வழியே சென்ற மற்றொரு டூவீலர் வாகனம் மற்றும் ஐடி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்கு செல்லும் பஸ் சென்றுள்ளது. இந்த இரண்டு வாகனங்களில் எந்த வாகனம் இவர் மீது மோதியது என்று தெரியவில்லை.

    அப்போது நிலை தடுமாறி காயத்திரி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டூஇதனை பார்த்த பஸ்ஸில் பயணித்த சக ஊழியர்கள் உடனடியாக இவரை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மின்னல் தாக்கி பெண் பலியானார்.
    • பசுமாடும் செத்தது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அருகே மனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 42). இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மதியம் 3 மணி அளவில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் விழுந்தது. அப்ேபாது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலாவையும், அவரது பசு மாட்டையும் மின்னல் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் செத்தது. இதுகுறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55)
    • மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அன்னபுஷ்பம்(வயது 55). இவர் சம்பவத்தன்று குருவன்கோட்டை-ஆலங்குளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அன்னபுஷ்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆலங்குளத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

     சென்னிமலை அருகே உளள் முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரு டைய மனைவி மகேஸ்வரி (61). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் பாவு நூல் பிணைக்கும் வேலை செய்து வந்தார்.

    வேலை முடிந்த பிறகு மகேஸ்வரி அதே பட்ட றையில் தறி மேஸ்திரியாக வேலை பார்க்கும் சென்னி மலை அருகே கொத்த ம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனி ன்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி ஆனார்.

    விழுப்புரம்:

    சென்னை பாடியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் இவர்உறவினர்கள் குழந்தை கள் உட்பட 19 பேர் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் உள்ள மகழி கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர் வேலை முத்துசாமி டிரைவர் ஓட்டி வந்தார் நேற்று இரவு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பேனில் பயணம் செய்த சுந்தரி . 48 . க/பெ.கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்களை உடனடி யாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் சென்ற போது வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 57). சம்பவத்தன்று இவர் தனது மகனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    • விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம்.புதூரில் தனது மாமனார் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நாட்டு வெடி, வாண வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பட்டாசு குடோனில் நேற்று மதியம் திடீரென வெடிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த குடோன் இடிந்து தரைமட்டமானது. இந்த வெடிசத்தம் குண்டு வெடித்தது போல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பட்டாசு குடோனில் வேலை பார்த்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி என்பவரின் மனைவி சித்ரா (வயது 37), வான்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் மனைவி அம்பிகா (,50), மூலக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (32) ஆகியோர் உடல்சிதறி பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் எம்.புதூரை சேர்ந்த வைத்தியலிங்கம், பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது  ஆஸ்பத்திரியில் வைத்தியலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி வனிதாவை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.

    இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×