search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Scheme"

    • சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்துக் கொண்டனர்.

    சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களின் கல்வி, உணவு, வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த டேக் கேர் இண்டர்நேஷ்னல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள 'தி மெட்ராஸ் கிராண்ட்' ஹோட்டலில் இன்று காலை நடைப்பெற்றது.

     

    இந்நிகழ்ச்சிக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான செளந்தர் ராஜா, லிட்டில் ஃபிளவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான் சேவியர் தங்கராஜ், நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுந்தரபாண்டி, இந்திய தொழில்துறை தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டி செந்தமிழன், சுதா ஃபவுண்டர் நிஷா தொட்டா, சாண்ட்விச் ஸ்கொயர் நிறுவனர் தன்வீர், போஸ் க்ளாத்திங் ஃபவுண்டர் உஸ்மான், வாசன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் இயக்குனர் வேனுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    • 87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர்:

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனு உள்ளிட்ட 306 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.4,30,800ல் செயற்கை கால்கள், 10 பேருக்கு தலா ரூ.78,850 என மொத்தம் ரூ.7,88,500-ல் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெ ட்ரோல் ஸ்கூட்டர்கள், 3 பேருக்கு தலா ரூ.2,900 என- ரூ.8,700 காதொலி கருவிகள், 2 பேருக்கு ரூ.785 என ரூ.1,570ல் ஊன்றுகோல் என மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும், தாட்கோ திட்டத்தின் கீழ் 58 பேருக்கு ரூ.1,94,38,874- நிலம் வாங்கும் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திடத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.90 லட்சத்தில் பல்வேறு தொழிற்கடன் உதவிகளையும் மற்றும் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்தில் கடனுதவிகள், ஒருவருக்கு வருவாய்த்துறையின் சார்பில் ஆதரவற்ற விதவை சான்று என மொத்தம் 87 பேருக்கு ரூ.2,18,27,619 அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை இந்துசாம்ராஜ்யம் சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.மத்திய அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் உடுமலை பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து, மத்திய அரசின் 8 ஆண்டுகளில் தரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இந்து சாம்ராஜ்யம் சார்பாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனர் சக்திவேல் மற்றும் சஷ்டிசேனா இந்துமக்கள் இயக்க நிறுவனர் சரஸ்வதி மக்களை சந்தித்து திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.  

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தொடங்கப்படவுள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஜெகதளாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் புதிய நலவாழ்வு மைய தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மையத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அந்த நாடு ஆரோக்கியம் நிறைந்த நாடாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பேணி காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக ஆரோக்கியத்தில் உலகளவில் நமது இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை உணவு, உடை மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்வதைவிட எதிர்பாராத வகையில், உடல்நலத்தை பேணிகாப்பதற்காக அதிகளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 6 கோடி கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளிலேயே 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

    இதேபோல் சுகாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், புகையினால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை போக்கும் வகையிலும், 8 கோடி ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2-ந் தேதி அன்று பிரதமரால் ஆயுஸ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 1.50 லட்சம் மக்கள் நலவாழ்வு மையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 10,487 மையங்கள் உள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், குன்னூர் வட்டாரத்தில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 44 துணை சுகாதார நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது.

    ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேர சேவைகள் வழங்கப்படும். இதன்படி அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைங்களை நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுகிறது.

    இந்த நலவாழ்வு மையங்களில் தாய் சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம், குடும்ப நலம், தொற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, தொற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை, பல் சிகிச்சை, மன நலம், முதியோர்கள் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை அவசர முதல் உதவி சிகிச்சை ஆகிய சேவைகள் அளிக்கப்படும்.

    அனைவருக்கும் இலவசமாக சுகாதார சேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே நலவாழ்வு திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களும் அவர்களது தகுதிபாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும். இந்த அரிய திட்டத்தின் முதற்படியாக குன்னூர் வட்டாரத்திலுள்ள ஜெகதளா துணை சுகாதார நிலையம், “நலவாழ்வு மையமாக” தொடங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நலனை கருத்தில கொண்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டும்”

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×