search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weavers"

    • வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.
    • தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, திலீபன், மாவட்ட எ.ம்ஜி.ஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பி ரமணியன், சவுரிரா ஜன்,நகர செயலாளர் நமச்சிவாயம், பேருராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணமாக இருந்தவர் அண்ணா.

    அவர் காட்டிய வழியில் அ.தி.மு.க. தொட ர்ந்து மக்கள் பணி செய்து வருகிறது.

    அண்ணா வழியி ல்நடப்போம் என கூறும் தி.மு.க.வினர் மக்களுக்காக எதையுமே செய்வதில்லை.தேர்தல் வாக்குறுதிகள் என்பது சதவீதத்திற்குமேல் நிறைவேற்றி உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்.

    தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டுள்ளனர் .மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தபட்டுள்ளது

    .இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் மகளிர் அணி கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • கைத்தறி துணிகளை வாங்கி அனைவரும் நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது இதை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அ டிப்படையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதில், 40எஸ், 60எஸ், 80எஸ் ரக பருத்தி சேலைகள், செயற்கை இழை பட்டுச் சேலைகள், கைத்தறி லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், போர்வை ரகங்கள் ஆகியவை அரசு வழங்கும் 20 சதவீத தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் 10 பயனா–ளிகளுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 10 நெசவாளர்களுக்கு ஒப்பளிப்பு ஆணைக–ளையும், முத்ரா கடனுதவி திட்டத்தின்கீழ், 10 நெசவாளர்களுக்கு கடனுதவிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் ரகுநாத் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கான குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.
    • பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், கைத்தறி துணை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீரக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    https://gdp.tn.gov.in/dhl, என்ற இணையதளத்தின் வாயிலாகவோ wgrcchennai;gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது குறை தீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை - 104 என்ற முகவரிக்கு குறை தீர்க்கும் அலுவலரை நேரில் அணுகியும் தெரிவிக்கலாம்.

    மேலும், தொலைபேசி எண்:044 - 25340518 (நேரம் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெசவாளர்கள் கோரிக்கைகளை அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • அரசு அலுவலக வேலை நாட்களில் சந்திக்கலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் அலுவலரிடம் தெரிவித்து பயனடையலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த 23.3.2022 அன்று கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டு, பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணையதளமும் தொடக்கி வைக்கப்பட்டது. இம்மையத்துக்கான முகமை அலுவலர், குறைதீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இணையதளத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம். 044 25340518 என்ற தொலைப்பேசி மூலம் தெரிவிக்கலாம்.

    நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், 2 ஆம் தளம், சென்னை 600104 என்ற முகவரிக்கு துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலருக்கு முகவரியிட்டு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். மேற்கண்ட வாய்ப்பினை நெசவாளர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெசவாளர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    தேனி:

    நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரி வித்திருந்தார்.

    நெசவாள ர்களின் கூலி உயர்வு, வேலைவாய்ப்பு, கைத்தறி துறை மூலம்செயல்படுத்த ப்படும் பல்வேறு திட்டங்க ளில் நெசவா ளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் நெச வாளர்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை
    • முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி

    கல்லிடை:

    கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவுத் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கைத்தறி சேவை மைய இயக்குநர் முத்துசாமி, நெல்லை சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் சங்கரேஸ்வரி ஆகியோர் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி பாளையங்கோட்டை, பேட்டை, பழைய பேட்டை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்களுக்கு நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் மாரிமுத்து முன்னிலையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது,

    இதில், கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஷேக் அப்துல் காதர், துணைத்தலைவர்கள் சாகுல்ஹமீது, பாடகலிங்கம், நெசவாளர் சேவை மைய முதுநிலை அதிகாரி சச்சின், இளநிலை அதிகாரி தீலிபன், கைத்தறி சங்க மேலாளர்கள் நடேசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இந்த நன்நாளில், நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, காந்தியடிகள் அறிவுறுத்தியவாறு, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால், நவீன நாகரீகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புறக்கை வினைஞர்களால் புதிய யுக்திகளுடன் தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள 88 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



    மேலும், கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவித்திட, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து/ இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை வழங்கு தல், 2017-2018 ஆம் நிதியாண்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 587 நூற்பாளர்கள் மற்றும் 50 நெசவாளர்களுக்கு ராட்டைகள் மற்றும் தறிகளை இலவசமாக வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தல், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 4 கோடி ரூபாயும், சர்வோதய சங்கங்களுக்கு 30 கோடி ரூபாயும் நடப்பாண்டில் தள்ளுபடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கிராமப்புற ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்திட வேண்டுமென, மக்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மணியன் தமிழக சட்ட பேரவையில் கைத்தறி மான்ய கோரிக்கை நாள் 08.06.2018 அன்று தமிழகம் முழுவதும் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், இடைகால் பகுதி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால், நோய் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. எனவே வீரவநல்லூர், புகுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாச முத்திரம் மற்றும் இடைகால் பகுதி நெசவாளர்கள் பெருமளவில் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நெல்லை கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் கேட்டுக்கொள்கிறார்.
    ×